ETV Bharat / state

திருச்சி - சென்னை ஜி-கார்னர் மேம்பால சீரமைப்பு பணிகள் துவக்கம்! அதிகாரிகள் ஆய்வு! - Trichy flyover work

G corner flyover in Trichy: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழுதான ஜி கார்னர் மேம்பாலத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கின.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 10:00 AM IST

திருச்சி - சென்னை ஜி-கார்னர் மேம்பால சீரமைப்பு பணிகள் துவக்கம்

திருச்சி: பொன்மலை ஜி-கார்னர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழித்தடத்தில், தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் உள்ளன.

கடந்த 2010ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தின் இடதுபுறம் உள்ள பகுதிகளில் பாலத்தின் வெளிப்புற கற்கள் ஜனவரி 12ஆம் தேதி திடீரென சரிந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம் விழும் அபாயம் ஏற்பட்டது. ஜி-கார்னர் பகுதியில் உள்ள இந்தப் பாலத்தின் தாங்கு தூண்களில் ஒன்று சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

மெட்ராஸ் ஐஐடியில் இருந்து நிபுணர் அழகு சுந்தரம் ஏற்கனவே இரண்டு முறை ஆய்வு மேற்கொண்டு உள்ளார். சேதம் அடைந்த பகுதியில் உள்ள சிமெண்ட் கற்களை பெயர்த்து எடுத்து பாலத்தின் உள்ளே சேதம் குறித்து ஆய்வு செய்யும் பணி துவக்கப்பட்டது. இந்த நிலையில் பாலத்தின் மேலே தூண் பகுதியில் 3 துளையிட்டு முதற்கட்ட பணி துவக்கி உள்ளனர்.

ஐஐடி போராசிரியர் அழகுசுந்தரம் அறிவுரைப்படி தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் துளையிட்டு பாலத்தின் உள்ளே என்ன சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய உள்ளனர். மேலும் பாலத்தை சீரமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் துவங்கியுள்ளன. பாலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் ஜீ கார்னர் பகுதியில் இருந்து போக்குவரத்து ஒரு வழிப்பாதை யாக திருப்பி விடப்பட்டுள்ளது.

நான்கு வழிச்சாலையில் ஒரு பகுதியை அடைத்து விட்டு திருச்சி வரும் மார்க்கத்தில் மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன கனரக வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய பயணிகள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையே உபயோகித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பொங்கல் விழாவிற்காக விடப்பட்டிருந்த விடுமுறை வரும் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட இதர மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய பயணிகள் இந்த சாலையை பயன்படுத்தும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையுள்ளது. இந்நிலையில், இதற்காக மாவட்ட நிர்வாகம் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை மார்க்கம் செல்லும் வாகனங்கள் மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர் வழியாக வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு: 15 காளைகளை அடக்கிய வீரருக்கு பைக்கும்; சிறந்த காளைக்கு வீட்டுமனை பரிசாக வழங்கல்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.