திருச்சி : அதிமுக ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி ஏமாற்றியதாகப் புகார் கூறப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், முன்பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார், முன்ஜாமீன் மனுவை கடந்த டிசம்பர் 17ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து, இந்த மோசடி வழக்கில் காவல்துறையினர் அவரை கைது செய்யாமல் இருக்கக் கிட்டத்தட்ட 20 நாள்கள் தலைமறைவாக இருந்தார். தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை பிடிக்க காவல்துறை தரப்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் கர்நாடக மாநிலம் ஹசன் அருகே கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி, ஜாமீன் வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, அவரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.
அடைக்கலம் கொடுத்த பாஜக பிரமுகர்; 20 நாட்களாகத் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி சிக்கியது எப்படி?
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை மட்டும் கைது செய்ய அவசரம் காட்டுவது ஏன்? என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியது.
இதற்கு தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்காத நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனையின் பேரில் இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டது. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் விருதுநகரை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது. வழக்கிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று (ஜன.13) காலை திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார். அருகே இருந்த ஹோட்டலில் காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு விருதுநகர் புறப்பட்டார்.
இதையும் படிங்க: ஜல்லிக்ட்டு; 'ஏலேய்... கிட்டி போடாத, மாட பிடி.. பரிச வாங்கு!