தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நீர்நிலைகளை தூர்வாரக் கோரி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள பொதுப்பணித்துறையின் ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தது.
இதற்கு தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு நீர்நிலைகளை தூர்வார வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதைத் தொடர்ந்து விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,' 2019 - 20ஆம் ஆண்டில் 1,829 நீர்நிலைகளை தூர்வார தமிழக அரசு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. பொதுப்பணித்துறையின் பாசன வாய்க்கால்களையும், ஏரிகளையும் தூர் வாருவதற்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதியை கொண்டு மழை காலத்திற்கு முன்னதாகவே ஏரிகளையும், வாய்க்கால்களை தூர் வாரவேண்டும்.
இதில் முறைகேடு நடக்கும் பட்சத்தில் தமிழகம் ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நாமம் இட்டு அரை நிர்வாண கோலத்தில் தமிழக முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றார்.