திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பொன்னர்-சங்கர் வீரப்போரிட்டு மாண்ட இடமான வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயிலிலும் கோட்டை கட்டிவாழ்ந்த பொன்னிவள நாட்டிலும் மாசிப் பெருந்திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்றுவருகின்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியின் தொடக்கமாக நேற்று மாலை பொன்னிவளநாட்டில் தங்காள் கிணறு தீர்த்தம் எடுத்தல், அம்மன்அழைத்தல் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நள்ளிரவில் முடிவு பெற்றதைத் தொடர்ந்து, பொன்னர் – சங்கர் மன்னர்களின் பெற்றோர் மாண்டுவிட, தங்கை அருக்காணி என்னும் நல்லதங்காளின் ஆற்றாமையை போக்க பொன்னர் கிளி பிடிக்க வீரமலை பகுதிக்குச் சென்று கிளி வேட்டை நடத்தி தங்கைக்கு கிளி பிடித்து தந்த வீர வரலாற்று நிகழ்வு பொன்னிவள நாட்டில் நடைபெற்றது.
பொன்னர்-சங்கர் அடுத்தடுத்த ஏழு வனங்களில் ஒன்றன்பின் ஒன்றாக கிளியைத் தேடி கிளி அங்கு இல்லாததால் வனங்களை துவம்சம் செய்துவிட்டு இறுதியில் ஆலமரத்தில் கிளியைக் கண்டுபிடித்து அதை பக்தர்களிடம் காட்டியபோது பக்தர்கள் மகிழ்ச்சியடைந்து தங்களின் சந்தோசத்தை வெளிப்படுத்தினர். பின்னர் அந்தக் கிளியைத் தங்கையிடம் ஒப்படைக்கிறார் பொன்னர்.
இதையும் படிங்க: மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்த திமுக!