ETV Bharat / state

"தெளிவான முடிவுகளை பிரதமர் மோடி எடுத்து வருகிறார்" - பொன் ராதாகிருஷ்ணன் - pon radhakrishnan said Modi is taking very clear decisions that can be implemented in the future

எதிர்காலத்தில் செயல்படுத்தக்கூடிய மிக தெளிவான முடிவுகளை பிரதமர் மோடி எடுத்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சின்ன குழந்தைகளை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தக் கூடாது - பொன் ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Jan 18, 2022, 10:42 AM IST

திருச்சி: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பல்வேறு கட்சியினர் நேர்காணல் நடத்தி வருகின்றனர். இதனிடையே, திருச்சி மாவட்டத்தில் பாஜக கட்சியினர் உள்ளாட்சித் தேர்தலுக்கான நேர்காணல் நேற்று (ஜனவரி 17) தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு நேர்காணல் நடத்தினர். நேர்காணலில் இதுவரை 230 பேர் விருப்ப மனுவைக் கொடுத்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதால் அதிக எண்ணிக்கையில் இடங்களைக் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் கேட்டுப் பெறுவோம்.

டெல்லியில் தொற்று அதிகமாக பரவி வருவதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும். அதனால் மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் குடியரசு தின அணிவகுப்பில் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

பாஜக கடிதம்

உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக வினர் மாற்றுக் கட்சிக்குத் தாவி வருவது குறித்த கேள்விக்கு, தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் இதுபோன்ற இடமாற்றங்கள் இருக்கும். ஆனால், இதெல்லாம் தாண்டி பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆட்சியையும் பிடித்திருக்கிறது.

ஒரு கட்சியை வைத்துக் கொண்டு ஒரு மாநிலத்தை ஓரங்கட்டும் நிலையை ஒரு காலமும் பாஜக எடுக்காது. எந்த ஒரு கட்சியையும் வைத்துக்கொண்டு ஆட்சியையும் வைத்துக் கொண்டு எந்த மாநிலத்தையும் புறந்தள்ளி வைக்க இந்த அரசாங்கம் முடிவெடுக்காது.

திருச்சி மாநகராட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் பொன் ராதாகிருஷ்ணன் நேர்காணல்

தெளிவான முடிவு

எதிர்காலத்தில் செயல்படுத்தக்கூடிய மிகத் தெளிவான முடிவுகளை பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வருகிறார். அதற்கான பலன் கிடைத்து வருகிறது. இதை கேலியும்,கிண்டலும் செய்வது முறையற்ற விஷயம். ஊடகங்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். சின்ன குழந்தைகளை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்பது என்னுடைய கருத்து. சின்ன குழந்தைகளை ஏன் அரசியலில் ஈடுபடுத்த வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: குழந்தைகளை வைத்து அரசியல் வன்மம் புகுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது; அண்ணாமலை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.