ETV Bharat / state

காலை முறித்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? கூலித் தொழிலாளி வேதனை - காவல்துறையினரின் தாக்குதலால் கால் முறிந்து வாழ்வாதாரத்தை இழந்த கூலித்தொழிலாளி

திருச்சி: உறையூர் அருகே காவல் துறையினரின் தாக்குதலால் கால் முறிந்து வாழ்வாதாரத்தை இழந்த கூலித் தொழிலாளி, தான் புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

trichy
author img

By

Published : Oct 6, 2019, 10:22 AM IST

திருச்சி மாவட்டம் உறையூர் பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். கூலித் தொழிலாளியான இவர் கடந்த ஜூலை 27ஆம் தேதி இரவு, தனது இருசக்கர வாகனத்தில் பாண்டமங்கலம் பிரதான சாலையில் சென்றுள்ளார்.

அப்போது அங்கு சாலையின் குறுக்கே உறையூர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் அழகுமுத்து, காவலர்கள் செல்லபாண்டியன், சுகுமார், ஓட்டுநர் இளங்கோவன் ஆகியோர் சாதாரண உடை அணிந்து நின்றுள்ளனர். அவர்களை காவலர்கள் என்று அறியாத ஜெயக்குமார் சாலையில் செல்ல வழிவிடுமாறு கேட்டுள்ளார். இதனால் ஜெயக்குமாருக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் ஜெயக்குமாரை அங்கேயே சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். பின்னர், அவர்கள் உறையூர் காவல் நிலையத்திற்கு ஜெயக்குமாரை அழைத்துச் சென்று அங்கையும் வைத்துத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, அவர் மீது காவல் துறையினரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் நடக்க முடியாதவாறு காலில் அடிபட்டு இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கால் முட்டி உடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர் தன்னை இந்த நிலைக்கு தள்ளிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார்.

காலை முறித்த காவல்துறையினர் - வாழ்வாதாரம் பாதித்த தொழிலாளி

இது குறித்து அந்தக் காவலர்களிடம் கேட்டதற்கு, ஜெயக்குமார் குடிபோதையில் காவல் துறையினரிடம் தகராறு செய்து காவலர்களை தாக்க முயன்றதாகவும், அவரின் இருசக்கர வாகனம் பள்ளத்தில் விழுந்ததால் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஜெயக்குமார் கூறுகையில், காவலர்கள் தாக்கியதால் ஏற்பட்ட கால் முறிவு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக நடக்க முடியாமல் உள்ளேன். இதனால் வேலைக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் உள்ளேன். காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும், இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனையோடு தெரிவித்தார்.

காவலர்கள் தாக்குதலால் கால் முறிவு ஏற்பட்டு வீட்டில் முடங்கியிருக்கும் ஜெயக்குமாருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடத்துநரைத் தாக்கிய காவலர்கள் - விசாரணைக்கு ஆஜராக மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

Intro:காவல்துறையினரின் தாக்குதல் காரணமாக கால் முறிவு ஏற்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக தொழிலாளி கண்ணீர் மல்க கூறினார்.

Body:திருச்சி: காவல்துறையினரின் தாக்குதல் காரணமாக கால் முடிந்து வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாக தொழிலாளி குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி உறையூர் பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். பிளம்பர் வேலை செய்து வந்தார். மேலும் இவர் பாண்டமங்கலம் கிராம நாட்டாமையாகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 27ஆம் தேதி இரவு 11 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பாண்டமங்கலம் மெயின் ரோட்டில் சாதாரண உடையில் இருந்த உறையூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்து, ஜீப் டிரைவர் இளங்கோவன், மற்றும் காவலர்கள் செல்லபாண்டியன், சுகுமார் ஆகியோர் சாலையின் குறுக்கே இன்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஜெயக்குமார் அவர்களை போலீசார் என்று தெரியாமல் வழி விடுமாறு கேட்டுள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் ஜெயக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் உறையூர் போலீஸ் ரோந்து வாகனத்தை வரவழைத்து அதனுள்ளே ஜெயக்குமாரை ஏற்றி மீண்டும் லத்தியால் சராமரியாக தாக்கியுள்ளனர். பின்னர் உறையூர் காவல் நிலையத்திற்கு ஜெயக்குமாரை அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். இதன்பின் தகவலறிந்த ஜெயக்குமாரின் மனைவி மேனகா மற்றும் அவரது குடும்பத்தினர் உறையூர் காவல் நிலையம் சென்று ஜெயக்குமாரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் பணியிலிருந்த போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதுவரை மயக்கத்தில் இருந்த ஜெயக்குமார் கண்விழித்து நடக்க முயன்றபோது அவரால் தனியாக நடக்க முடியவில்லை. என்ன நடந்தது என்று தெரியாமல் கால் வலியில் அவதிப்பட்டார்.
இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்று வலது கால் முட்டி பகுதியில் மாவு கட்டு போட்டுள்ளனர். அதன் பின்னரும் கால் வலி சரியாகவில்லை. தனியார் மருத்துவமனைக்கு சென்ற ஜெயக்குமார் மாவு கட்டவிழ்த்துவிட்டு பரிசோதனை செய்து பார்த்தார். அப்போது வலது கால் முட்டி உடைந்து இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயகுமார் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு மருத்துவர்கள் ஆறுதல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஜெயக்குமாருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து தன்னை தாக்கி வலது காலை முறித்த போலீசார் அழகுமுத்து, இளங்கோவன், செல்லப்பாண்டியன், சுகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர், மாநகர போலீஸ் கமிஷனர், மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது சம்பவம் நடந்து மூன்று மாதம் நெருங்கி விட்ட நிலையிலும் ஜெயக்குமார் கால் குணமடையாமல் அவதிப்பட்டு வருகிறார். அவரால் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. வேலைக்கும் செல்லவில்லை. இதனால் அவரது குடும்பம் துயரத்தில் வாடிக் கொண்டிருக்கிறது.
சமீபகாலமாக கைது செய்யப்படும் குற்றவாளிகள் காவல் நிலையத்தில் கழிப்பிடத்தில் வழுக்கி விழுந்து கால் முறிவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. குற்றங்களை தடுப்பதற்காக போலீசார் குற்றவாளிகளின் கால் அல்லது கைகளை அடித்து முறித்து விடுவதாகக் மக்கள் மத்தியில் கருத்து நிலவியது.
அவ்வாறு கால் முறிவு ஏற்படுத்தும் போது வெளி காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் நுட்பத்தை போலீசார் கையாண்டு வருகின்றனர். இதே பாணியில் தான் ஜெயக்குமாரும் தாக்கப்பட்டு கால் முறிக்கப்பட்டு இருப்பதாக ஜெயக்குமார் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
3 மகள்களை வைத்துக்கொண்டு வேலைக்கும் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக ஜெயக்குமார் கண்ணீர் மல்க கூறினார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், சம்பவத்தன்று ஜெயக்குமார் குடிபோதையில் வந்து போலீசாருடன் தகராறு செய்து போலீசாரை தாக்க முயன்றதோடு, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து சென்றபோது பள்ளத்தில் விழுந்து கால் முறிவு ஏற்பட்டதாக தெரிவித்து உள்ளனர்.
மேலும் பிரச்சனையை பெரிது படுத்தாமல் இருக்க ஜெயக்குமார் குடும்பத்தோடு சமரசத்திற்கும் போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். பணம் கொடுத்து படிகட்டில் தவறி விழுந்ததாக எழுத்துப்பூர்வமாக அறிக்கை வாங்கவும் உறையூர் போலீசார் முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Conclusion:ஜெயக்குமாரின் குடும்பத்தாரிடம் பணம் கொடுத்து சமரச முயற்சிக்கு போலீசார் முயன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.