ETV Bharat / state

காவல் நிலைய மரணம் இனி இருக்கக்கூடாது - டிஜிபி சைலேந்திர பாபு

காவல் நிலைய மரணம் இனி இருக்கக்கூடாது என்று திருச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் தேவைக்கு மட்டும் தங்கள் பலத்தை உபயோகப்படுத்தலாம் - டி.ஜி.பி. சைலேந்திர பாபு

author img

By

Published : May 22, 2022, 8:36 AM IST

திருச்சி: தமிழ்நாடு டிஜிபி தலைமையில் காவல் நிலையங்களில் நடைபெறும் மரணங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு திருச்சி தூய வளனார் கல்லூரியில் நேற்று (மே 21) நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தலைமை தாங்கினார். இதில் மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்கள் மற்றும் திருச்சி மாநகரிலுள்ள காவல் உயர் அலுவலர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காவல் நிலைய மரணங்கள் தடுப்பது குறித்து ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள், துணை இயக்குநர்கள், வழக்கறிஞர்கள் அறிவுரை ஆலோசனை வழங்கினர். 300-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர். கூட்டத்திற்கு மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். பொதுவாக சென்னையில்தான் இப்படிப்பட்ட கூட்டம் நடத்தப்படுவது வாடிக்கை ஆனால் முதல்முறையாக திருச்சியில் நடைபெற்றது.

டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி

முன்னதாக தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளும் தற்போது இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் சுமார் 950 மரணங்கள் 10 ஆண்டுகளில் காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்று உள்ளது அதில் தமிழ்நாட்டில் 84 மரணங்கள் நடைபெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இனி ஒருவர்கூட காவல்துறை கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் உயிர் இழக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். அந்த அடிப்படையில் இந்த பயிற்சி முகாம் திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ளக்கூடிய அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. மேலும் வர்மக்கலை, கராத்தே குங்பூ உள்ளிட்ட தற்காப்பு கலைகளையும் இந்த கருத்தரங்கில் கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. காவல்துறையினர் தாக்கினாள் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் உயிர் இழந்தார்கள் என்று சொல்ல முடியாது.

சிலர் உடல்நலக்குறைவாலும் மருத்துவ கட்டுப்பாட்டில் இருந்தவர்களும் கூட உயிர் இழப்பார்கள். ஒரு சிலர் காவலர்களை தாக்குகிறார்கள் அப்போது அந்த நேரம் அவர்களிடமிருந்து காவலர்கள் தங்களை எவ்வாறு தடுத்துக் கொள்வது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

சிறையில் இனி ஒருவர்கூட இறக்கக்கூடாது, காவல் நிலைய மரணம் இனி இருக்கக்கூடாது. காவல்துறையினர் தேவைக்கு மட்டும் தங்கள் பலத்தை உபயோகப்படுத்தலாம். குற்றவாளிகள்தான் காவல்துறையினரை பார்த்து பயப்பட வேண்டும். நல்லவர்கள் பயப்பட தேவையில்லை.

இதுவரையில் சுமார் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேருக்கு சிறந்த டாக்டர்கள் மூலமாக மனநல பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளன. அவர்கள் மூலமாக காவல்துறையினர் அதிகமானோருக்கு அந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. காவலர்களுக்கு ஏற்படும் மன இருக்கத்தை குறைப்பதற்காக கட்டாய ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது.

ஆபத்து வரும்போது காவலர்கள் திறமையாக செயல்பட வேண்டும். பொதுமக்களை காவல்துறையினர் ஆபத்து நேரத்தில் காப்பாற்றுவது குறித்த விழிப்புணர்வு அதிகமாக ஏற்படுத்தி வருகிறோம். கள்ளச்சாராயம் தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. சில மலைப்பகுதிகளில் மட்டும் தான் இருக்கிறது அதையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது காவல்துறையில் சேர்வதற்காக 10,000 காவலர்கள் பயிற்சியில் உள்ளார்கள். தொடர்ந்து கல்லூரிகளில் வன்முறை மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்கு பதியப்படும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆம்பூரில் உறங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.