ETV Bharat / state

திருச்சியில் பொது வெளியில் பட்டா கத்தியுடன் சுற்றித் திரிந்த இளைஞர் கைது.. உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ள போலீசார் அறிவுறுத்தல்! - திருச்சி காவல்துறை

Youth arrested for roaming with sickle in public: திருச்சி மாவட்டத்தில் உள்ள கடை வீதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எச்சரிக்கும் திருச்சி காவல்துறை
பொது வெளியில் பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த இளைஞர் கைது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 12:35 PM IST

திருச்சி: எட்டரை கிராமப் பகுதியில் பொது வெளியில் பட்டா கத்தியுடன் சுற்றித் திரிந்த இளைஞரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர். மேலும், ஆபத்தான முறையில் இது போன்ற ஆயுதங்களுடன் பிறந்தநாள் உள்ளிட்ட விழாக்களைக் கொண்டாடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், சட்டவிரோதமாக குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் அடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தொகுதி எட்டரை கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் (21) எனும் இளைஞர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக் கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வசனங்களை பேசி ரீல்ஸ் செய்து, அதனை அவரது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று (டிச.15) எட்டரை கிராமத்தில் உள்ள கடைவீதியில் கையில் அரிவாளுடன் முகேஷ் நின்று கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அவர் அரிவாளுடன் சுற்றித் திரிவதாகவும் திருச்சி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை.. ராணிப்பேட்டையில் நடந்தது என்ன?

இந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் எட்டரை பகுதி கடை வீதிக்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது, முகேஷ் கையில் அரிவாளுடன் சுற்றி திரிவதை கண்ட போலீசார் அவரை சுற்றி வளைத்துள்ளனர். இதையடுத்து, அவரை சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இது போன்ற அபாயகரமான ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிடும் நபர்கள் அரிவாள், கத்தி, போன்ற ஆயுதங்களைக் கொண்டு பிறந்தநாள் விழா மற்றும் பிற விழாக்களில் கேக் வெட்டும் நபர்கள் வில்லன் போன்ற தோனியில் பின் இசைகள் கொண்ட பாடல்களுடன் வீடியோக்கள் பதிவிடும் நபர்கள் ஆகியோரின் விவரங்களை உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹெல்ப்லைன் (help line: 94874 64651) எண்ணிற்கு தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.

மேலும், திருச்சி மாவட்ட காவல் துறையின் சமூக வலைத்தளங்கள் கண்காணிப்புக் குழுவானது எப்போதும் இதனை கண்காணிப்பார்கள் எனவும், அபாயகரமான ஆயுதங்களுடன் வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிடும் நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஈரோட்டில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்: இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு..எஸ்பி ஆபிஸில் புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.