திருச்சி மாவட்டத்தில் போலி கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து க்யூ பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர். அப்போது பெரிய மிளகுபாறை பகுதியைச் சேர்ந்த செபாஸ்டின் (35), காஜாபேட்டையைச் சேர்ந்த முகமது காசிம் (52), மேல சிந்தாமணியைச் சேர்ந்த பழனிவேல் (54), கண்ணையன் (60) ஆகியோர் மீது சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர்கள் வாடகைக்கு வீடு எடுத்தும் கடவுச்சீட்டு அலுவலகம் அருகே அலுவலகம் அமைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் நடத்திய விசாரணையில், கடவுச்சீட்டு எடுக்க வருபவர்களை ஏமாற்றி போலி கடவுச்சீட்டுகளை தயார் செய்து கொடுத்துள்ளனர்.
அதையடுத்து அவர்களின் அலுவலகத்திலிருந்து போலி கடவுச்சீட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட அரசு முத்திரை, கணினி, ஸ்கேனர், பிரிண்டர் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிக்கலாமே: சென்னையில் கொள்ளையடித்துவிட்டு தப்ப முயன்ற வட இந்தியர்கள்: மடக்கிப் பிடித்த போலீஸ்!