ETV Bharat / state

டிஎன்பிஎல்-அப்துல்கலாம் பசுமை இயக்கம் இணைந்து மரக்கன்றுகள் நடவு - 30 வகையான மரக்கன்றுகள்

திருச்சி: டிஎன்பிஎல் நிறுவனம்-அப்துல்கலாம் பசுமை இயக்கம் இணைந்து வேம்பு, புங்கன், ஆல, அரச போன்ற 30 வகையான மரக்கன்றுகளை நட்டனர்.

டிஎன்பிஎல் மற்றும் அப்துல்கலாம் பசுமை இயக்கம் இணைந்து 30 வகையான மரக்கன்றுகள் நடவு - பொதுமக்கள் மகிழ்ச்சி.

author img

By

Published : Sep 11, 2020, 10:37 AM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டியில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பசுமை இயக்கம்-தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் டிஎன்பிஎல் (TNPL - Tamil Nadu Newsprint and Papers limited) சார்பில் தொடர் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பசுமை இயக்க நிர்வாகிகள், வருவாய்த் துறை, நீர்வள மேலாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வனத் துறை, டிஎன்பிஎல் அலுவலர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வேம்பு, புங்கன், புளி, ஆல, அரச, உச்சி உள்ளிட்ட முப்பது வகையான மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டன. இதனையடுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய டி.என்.பி.எல் காகித ஆலை மற்றும் செய்தித்தாள் நிறுவன அலுவலர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்றும், ஒரு டன் மரங்கள் 1 டன் ஆக்சிஜனை வெளியேற்றி 1.5 டன் கார்பன் டை ஆக்ஸைடு உள்வாங்குகிறது என்றும், ஒரு டன் எடையுள்ள மரங்கள் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றுச் சூழலைப் பாதுகாக்கிறது என்றும் தெரிவித்தனர்.

மேலும் மணப்பாறை பகுதியில் தற்போது வரை 726 ஏக்கர் பரப்பளவிற்கு இதுவரை மரக்கன்றுகளை நடவுசெய்துள்ளதாகவும், தங்களது இலக்கான 1000 ஏக்கரை விரைவில் எட்டிவிடுவோம் என்றும் தெரிவித்தனர்.

இதனையடுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நடவுசெய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.