பெரம்பலூர்: நாரணமங்கலம், கொளக்காநத்தம், குடிகாடு, கொட்டரை, ஆதனூர், தெற்குமாதவி உள்ளிட்ட கிராமங்களில் ஆடுகள் தொடர்ந்த திருடுபோவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஆட்டுக்குட்டியுடன் வந்த கிராம மக்கள் ஆடுகள் திருடு போவது குறித்து புகார் கொடுத்தனர்.
அதில்," இருசக்கர வாகனங்களில் வரும் சிலர் ஆடுகளை திருடிச்செல்வதாகவும், ஆடுகளை திருடிச்செல்பவர்களின் முகவரி உள்ளிட்டவை குறித்து மருவத்துர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர். எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள்க'- ராமதாஸ்