கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியாரின் முழு உருவச் சிலை மீது நேற்றிரவு (ஜூலை 16) சமூகவிரோதிகள் சிலர் காவி பெயிண்ட்டை ஊற்றி அவமதித்தது, தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில், பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேவுள்ள பெரியார் சிலை முன்பு, திராவிட கழக மாவட்டத் செயலாளர் ஆறுமுகம் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறமலிருக்க திருச்சி மத்திய பேருந்து நிலையம் முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.