ETV Bharat / state

திருச்சியில் நகரப் பேருந்து சிறைப்பிடிப்பு - tamilnadu latest news

திருச்சி: நகரப் பேருந்து கால தாமதமாக தினமும் வருவதால் பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.

நகர்ப் பேருந்து சிறைப்பிடிப்பு
நகர்ப் பேருந்து சிறைப்பிடிப்பு
author img

By

Published : Feb 9, 2021, 6:34 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து வீரப்பூர் செல்லும் நகரப் பேருந்து முறையாக வருவதில்லை எனத் தெரிகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீரப்பூர் பகுதியில் பொதுமக்கள் பேருந்தை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.

நகர்ப் பேருந்து சிறைப்பிடிப்பு

இதையடுத்து அப்பகுதிக்கு பேருந்து தினமும் சரியாக வந்து சென்றது. இந்நிலையில் மீண்டும் கடந்த பத்து நாள்களாக பேருந்து கால தாமதமாக வந்தது. இதனால் பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த நகரப் பேருந்தை சிறைப்பிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரிடம் பொதுமக்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போக்குவரத்து அலுவலர்கள் பொதுமக்களிடம், இதுபோன்ற சம்பவம் தொடராது என உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: சாராயத்தால் சீரழியும் கிராமம் ! பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.