ETV Bharat / state

100 நாள் வேலைத்திட்டம்: நிபந்தனைகளை மதிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை தேவை!

author img

By

Published : May 20, 2020, 3:54 PM IST

திருச்சி: வையம்பட்டி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் அரசு கூறிய நிபந்தனைகளை மதிக்காமல் செயல்பட்டுவரும் ஊராட்சி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.

ஊராட்சி நிர்வாகத்தினரை கண்டிக்கக் கோரிக்கை

கரோனா தொற்று பரவுதல் காரணமாக தற்போது நான்காவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக ஊரடங்கு உத்தரவில் மக்களின் வாழ்வாதாரம் கருதி ஒரு சில தளர்வுகளைத் தொடர்ந்து அறிவித்துவருகிறது தமிழ்நாடு அரசு.

அதன் ஒரு பகுதியாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திற்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் வேலையைத் தொடரலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

அதன்மூலம் தற்போது உள்ளாட்சிப் பகுதிகளில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டமானது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதன் ஒரு பகுதியாகத் திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட முகவனூர் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில், தமிழ்நாடு அரசு அறிவித்த 50 வயதிற்குள்பட்டவர்களுக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும் என்னும் நிபந்தனையை முகவனூர் ஊராட்சி நிர்வாகிகள் மதிக்கவில்லை.

அரசு கூறியதை முறையாகக் கடைப்பிடிக்காமல் 50 வயதிற்குள்பட்ட சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்காமல் அவமதித்துவருகின்றனர்.

மேலும், ஊராட்சி நிர்வாகத்தினர், அவர்களுக்கு வேண்டியவர்களாக இருந்தால் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும் வேலை வழங்கிவருகின்றனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: '55 வயசாயிடுச்சு வேலைக்கு வராதன்னு சொல்லுறாங்க...' - வேதனையில் தினக் கூலிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.