திருச்சி - மணப்பாறை அடுத்த கரும்புலிபட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஹரி சரவணன் (20). இவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அரநிலைபாளையத்தில் இருந்து கேக் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
அப்பொழுது வீ.பூசாரிபட்டி பிரிவு சாலை அருகே எதிரே வந்த டிராக்டர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற கரும்புலிபட்டியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் வசந்த்(23) சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பின்னால் உட்கார்ந்து சென்ற ஹரி சரவணன் படுகாயமடைந்துள்ளார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன் ஹரி சரவணனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், டிராக்டரை எடுத்து வந்து மணப்பாறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவான டிராக்டர் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: உக்ரைனில் சிக்கிய கொடைக்கானல் மாணவி?