திருச்சி: மணப்பாறை பேருந்து நிலையம் அருகே மறைந்த திமுக முன்னாள் தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு ஆலமரத்தடியில் அமர்ந்திருப்பது போல் ஒரு பேனரும், 30 ஆயிரம் செலவில் 18 அடி உயரத்திற்கு மரத்தினால் ஆன பேனா சிலையும் வைத்திருந்தனர்.
நிகழ்ச்சியில் கலைஞரின் புகழ் ஓங்குக என முழக்கமிட்டு அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பிரியாணி வழங்கினர். 134 அடியில் 80 கோடி செலவில் கடலுக்குள் கலைஞரின் பேனா சிலை அமைக்கப்படும் என தகவல் பரவியது.
அதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில் முன்னோட்டமாக இன்று மணப்பாறையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நேரு ஆதரவாளர்கள் பேனா சிலை வைத்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வ.உ.சி சுவரோவியத்தின்மீது கருணாநிதியின் படம் வைத்ததால் பரபரப்பு!