ETV Bharat / state

'நாசிக் வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்' - திருச்சியில் குவிந்த சில்லறை வியாபாரிகள்! - திருச்சியில் நாசிக் வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்

திருச்சி: வெங்காய மண்டிக்கு வந்த நாசிக் வெங்காயம், ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதையடுத்து, சில்லறை வியாபாரிகள் பலர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

NASIK ONION
நாசிக் வெங்காயம்
author img

By

Published : Dec 10, 2019, 9:51 PM IST

இந்தியா முழுவதும் வெங்காய உற்பத்தி பற்றாக்குறை காரணமாக, ஒரு கிலோ வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனைச் சரிசெய்யும் விதமாக, வெளி நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதனடிப்படையில், முதல்கட்டமாக எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 30 டன் வெங்காயம் மும்பை வழியாக நேற்று திருச்சி வெங்காய மண்டியை வந்தடைந்தது. அது ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், வெங்காயத்தின் நிறம் மாறி இருந்ததால் மக்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை.

திருச்சியில் நாசிக் வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்

இன்று மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் இருந்து பெரிய வெங்காயம் 30 டன், திருச்சி பழைய பால்பண்ணைப் பகுதியில் உள்ள வெங்காய மண்டியை வந்தடைந்தது.

இந்த நாசிக் வெங்காயம், ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, சில்லறை வியாபாரிகள் பலர் ஆர்வத்துடன் வந்து வெங்காயத்தை வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்' - விஜயபாஸ்கர்

Intro:திருச்சியில் நாசிக் வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.Body:
திருச்சி:
திருச்சியில் நாசிக் வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் வெங்காய விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய்க்கு விற்றது. இதனால் அதை வாங்க முடியாமல் பெண்கள் தவித்தனர். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. இதுதவிர வெங்காய வியாபாரிகள் தனித்தனியாக வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்துள்ளனர். இந்த வகையில் எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 30 டன் வெங்காயம் மும்பை வழியாக நேற்று திருச்சி வெங்காய மண்டியை வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து பெரிய வெங்காயம் 30 டன் திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் உள்ள வெங்காயம் மண்டியை வந்தடைந்தது. எகிப்து வெங்காயம் நேற்று கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. அதன் நிறம் மாறி இருந்ததால் யாரும் வாங்கவில்லை. இந்நிலையில் நாசிக்கில் இருந்து வந்த வெங்காயம் இன்று ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து சில்லரை வியாபாரிகள் பலர் ஆர்வத்துடன் வந்து வெங்காயத்தை வாங்கி சென்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.