ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்களுக்கு பூவம் ரக வாழைப்பழம் வழங்கிய மணப்பாறை நகராட்சி! - banana to cleaners

திருச்சி: கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் மணப்பாறை நகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பூவம் ரக வாழைப்பழம் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.

மணப்பாறை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள்  திருச்சி மாவட்டச் செய்திகள்  Municipality of Manapparai  banana to cleaners  trichy district news
தூய்மைப் பணியாளர்களுக்கு பூவம் ரக வாழைப்பழம் வழங்கிய மணப்பாறை நகராட்சி
author img

By

Published : May 8, 2020, 8:23 PM IST

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணிகளில் முன்னணி வீரர்களாக தூய்மைப் பணியாளர்கள் விளங்கி வருகின்றனர். அந்த தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மணப்பாறை நகராட்சியில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மளிகைப் பொருள்கள், காய்கறிகள், வைட்டமின் டி மாத்திரைகள் உள்ளிட்டவைகள் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு இல்லாமல், நகராட்சி ஆணையரின் உத்தரவின்படி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூவம் ரக வாழைப்பழங்கள் 500 கிலோ தொட்டியத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வாழைப்பழ உற்பத்தியாளர்கள் சங்கத்திலிருந்து கொண்டுவரப்பட்டு தூய்மைப் பணியாளர்கள், அம்மா உணவகப் பணியாளர்கள், நகராட்சி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: மதுரையில் மதுபான விற்பனை எவ்வளவு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.