திருச்சி: மணப்பாறை அருகே உள்ள பொன்னம்பலத்தான்பட்டியைச் சேர்ந்தவர் நித்யா (27). இவர் வளநாடு அருகே உள்ள வரதக்கோன்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவரை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு மகன், மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கருத்து வேறுப்பாட்டால் பிரிவு
நித்யாவுக்கும் முகேசனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக நித்யா தனது தாயார் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ஜூன் 29ஆம் தேதி நித்யா தனது கணவர் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்து வீடு திரும்பிய பின் நித்யா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறிப்படுகிறது.
தற்கொலை முயற்சி
இதனையடுத்து நித்யா ஜூலை 1 ஆம் தேதி தானும் தனது குழந்தைகளும் எலி மருந்து சப்பிட்டதாக, பஞ்சாலையில் வேலைக்கு சென்ற தனது தம்பி ஆறுமுகத்திடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு பதறிப்போன ஆறுமுகம் உடனடியாக வீட்டிற்கு வந்து நித்யா, இரு குழந்தைகளையும் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
நித்யாவும் இருகுழந்தைகளும் சிகிச்சைக்கு அனுமதி
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், நித்யா, குழந்தைகளின் உடல்நிலை மிகவும் மோசமனதையடுத்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில், ஜூன் 2ஆம் தேதி மாலை நித்யா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
தாய், இருகுழந்தைகள் உயிரிழப்பு
இதனையடுத்து நள்ளிரவு நித்யாவின் குழந்தைகளான மகன் ரோகித், மகள் நல்லக்கண்ணு இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து நித்யாவின் தந்தை சாமிக்கண்ணு மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நித்யா எழுதிய கடிதம்
![suicide](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12346165_let.jpg)
இந்தநிலையில், பஞ்சாலையில் வேலைப்பார்த்து வந்த நித்யாவின் கைப்பையை அவரது குடும்பத்தினர் திறந்து பார்த்தனர். அதில், நித்யா, தான் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வைத்திருந்தார்.
அந்த கடிதத்தில், தனக்கு நல்ல கணவரும் கிடைக்கவில்லை, தனது குழந்தைகளுக்கு நல்ல தந்தையும் கிடைக்கவில்லை. எங்களது உயிரிழப்புக்கு கணவர் முருகேசனும், அவரது சகோதரியும்தான் காரணம். தனது சொத்துகள் அனைத்தும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
![suicide](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12346165_suci.jpg)
இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் நித்யாவின் கணவர் முருகேசன், அவரது சகோதரியை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருமணம் வேண்டாம்... இளைஞர் தற்கொலை முயற்சி