ETV Bharat / state

சிலம்பத்தில் சாதனை படைத்த சிறுமியை வீடு தேடி சென்று வாழ்த்திய எம்எல்ஏ - சிலம்பத்தில் சாதனை படைத்த சிறுமி

சிலம்பக் கலையில் பல்வேறு சாதனை படைத்த சிறுமி சுகித்தாவை, அவரது வீட்டிற்கே சென்று திருச்சி சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிலம்பத்தில் சாதனை படைத்த சிறுமி
சிலம்பத்தில் சாதனை படைத்த சிறுமி
author img

By

Published : Aug 4, 2021, 10:48 PM IST

Updated : Aug 4, 2021, 11:06 PM IST

திருச்சி: தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டக் கலையில் தேர்ச்சி பெற்று, பங்கேற்கும் அத்தனை போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்று வருபவர், திருச்சி மாவட்டம், ரஞ்சிதபுரத்தைச் சேர்ந்த மோகன் - பிரகதா தம்பதியரின் மகள் சுகித்தா (12).

சிறுவயதிலேயே சாதனை

கோவா சர்வதேச போட்டியில் முதல் பரிசாக தங்கம் வென்றதில் தொடங்கி, சிங்கப்பூர் சர்வதேச போட்டியில் முதல் பரிசு தங்கம், ஒட்டுமொத்த பெண்கள் சாம்பியன் பட்டம், டெல்லியில் நடந்த தேசிய போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளியென 25-க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்களை குவித்துள்ளார். 12 வயதிலேயே சிலம்பக்கலையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வகை பாடங்களை கற்றுத் தேர்ந்துள்ளார்.

இப்படி பல்வேறு சாதனை புரிந்த சுகித்தாவின் இல்லத்திற்கு இன்று திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நேரடியாக சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எம்எல்ஏ உறுதி

முதலமைச்சர் ஸ்டாலினை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதோடு, விரைவில் திருச்சியில் தொடங்கப்படவிருக்கும் ரைபிள் கிளப்பில் கவுரவ உறுப்பினராக பரிந்துரை செய்யப்படும்; சிலம்ப பயிற்சிக்கு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் களம் அமைத்து தரப்படும் என்று இனிகோ இருதயராஜ் உறுதியளித்துள்ளார்.

சுகித்தா தன் வீட்டருகில் உள்ள ஆறு வயது சிறுவர் முதல் அனைவருக்கும் இலவசமாகவே சிலம்பம் கற்று தரும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு வாரம்: இலவச சித்த மருந்துகள் விநியோகம்

Last Updated : Aug 4, 2021, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.