திமுக 11ஆவது மாநில மாநாடு பிப்ரவரி மாத இறுதியில், திருச்சியில் நடைபெறுகிறது. அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் சுமார் 500 ஏக்கரில் நடைபெறும் இந்த மாநாட்டின் ஏற்பாடுகள் நேற்று தொடங்கியது. திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மாநாட்டுப் பணிகளை நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாநாடு நடைபெறும் இடம், முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார். அப்போது, மாநாடு நடைபெறும் இடத்தின் வரைபடத்தை கொண்டு நேரு விளக்கிக் கூறினார். இதனிடையே, மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட வந்த மு.க.ஸ்டாலினுக்கு ஏராளமான திமுகவினர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
![திமுக 11வது மாநில மாநாடு DMK 11th State Conference MK Stalin visits 11th DMK Conference works in trichy MK Stalin visits 11th DMK Conference 11th DMK Conference திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் திமுக 11வது மாநில மாநாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10301751_tri1.jpg)
இந்நிகழ்வின்போது திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்டாலின் குமார், சௌந்தரபாண்டியன், திமுக மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன், மாநகர செயலாளர் அன்பழகன், மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சீனிவாச பெருமாள், சிறுகனூர் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணையன், சிறுகனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் மாவட்ட பிரதிநிதியுமான மூர்த்தி உள்பட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: திமுக மாநாடு பணிகள் தொடக்கம்!