11ஆம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில், 2020 -2021ஆம் ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் பணி நடந்துவருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருச்சியில் இன்று (ஜன. 02) பள்ளி, மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல் நிலைப்பள்ளி, ஸ்ரீரங்கம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இந்த விழாக்கள் நடைபெற்றன.
இந்த விழாக்களில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு 10 ஆயிரத்து 755 மாணவர்கள், 13 ஆயிரத்து 832 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 587 பேருக்கு மிதிவண்டிகளை வழங்கினர்.
விழா மேடையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், "திருச்சி மாவட்டத்தில் இன்று 9.68 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. பெற்றோர், ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும். அரசு கொடுக்கும் சலுகைகளைப் பயன்படுத்தி நல்ல முறையில் பயின்று வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'அன்னை தெரசா உயிருடன் இருந்திருந்தால் முதலமைச்சரை வாழ்த்தியிருப்பார்' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்