தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் பரவல் மிகவேகமாக உள்ளது. அதேநேரத்தில் பலமக்களின் வாழ்வாதாரம் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னார்வலர்களும், பல அரசியல்வாதிகளும் உதவிய வண்ணம் உள்ளனர்.
இதேபோல் திருச்சி மாவட்ட காஜாப்பேட்டை மேல்நிலை நீர் தேக்க தொட்டி வளாகத்தில் கிழக்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஏர்போர்ட் பகுதி, காஜாப்பேட்டை வார்டுகளைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு தலா ஐந்து கிலோ அரிசி, அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.
மேலும் முகக்கவசம், சமூக இடைவெளி, உடல், சுற்றுப்புறத்தூய்மை குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வெல்லமண்டி ஜவகர்லால் நேரு, சுரேஷ் குப்தா, அதிமுக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதேபோல் திருச்சி, கீழரண் சாலை, அரசு மகளிர் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நிவாரண பொருட்களை அமைச்சர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.
இதையும் படிங்க: '23ஆம் புலிகேசியின் அரசியல் வடிவம் ஸ்டாலின்' - அமைச்சர் கிண்டல்