ETV Bharat / state

'2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்!'

திருச்சி: 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என அமைச்சர் வளர்மதி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என அமைச்சர் வளர்மதி நம்பிக்கை

author img

By

Published : Sep 19, 2020, 8:11 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காட்டுப்பட்டுயில் அதிமுக சார்பில் இன்று (செப். 19) இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமினை கழக அமைப்புச் செயலாளரும், பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சருமான வளர்மதி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பரஞ்சோதி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வளர்மதி, “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதுபோல் வருகின்ற 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக உறுதியாக வெற்றிபெறும்.

வருகின்ற தேர்தலில் தகவல் தொழில்நுட்ப அணி மிகச்சிறப்பாகச் செயல்பட்டு அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பைத் தேடித்தரும்” என நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறையில் அமைச்சர் வளர்மதி முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.