திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு 75 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், " டெல்டா மாவட்டத்திற்கு கால்வாய்கள் சீரமைக்க ரூ.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சொந்த நிதியில் இருந்து 1.50 கோடி ரூபாய் மதிப்பில் 150 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளார். அதில் திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்குத் தலா 75 செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் ஆயிரத்து 99 படுக்கைகள் உள்ளன. அதில் 175 படுக்கை காலியாக உள்ளது. ஆக்ஸிஜன் படுக்கைகள் 743. அதில் 30 காலியாக உள்ளது. 356 ஆக்ஸிஜன் இல்லாத படுக்கையாக உள்ளது. அதில் 175 காலியாக உள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 200 நோயாளிகள் புதிதாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் 200 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புகின்றனர்.
'கோ பேக் ஸ்டாலின்' என்பதைவிட 'ஸ்டாண்டு வித் ஸ்டாலின்' என்ற ஹேஷ்டேக் தான் நம்பர் 1இல் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: தடுப்பூசி, ஆக்ஸிஜன் அளவை உயர்த்த வேண்டும் - பிரதமருக்கு எடப்பாடி கடிதம்