ETV Bharat / state

சென்னைக்கு நிகராக திருச்சியை மேம்படுத்துவோம்- அமைச்சர் கே.என்.நேரு

author img

By

Published : Jul 15, 2021, 7:24 AM IST

சென்னைக்கு நிகராக திருச்சியை மேம்படுத்துவோம் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி : தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இனைந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூபாய் 2 கோடி மதிப்பிலான குடல் இரைப்பை உள்நோக்கி கருவிகளை மருத்துவ சிகிச்சை பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தனர்.

அதே போல் 53 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் பிளான்ட்டினை மருத்துவ பயன்பாட்டிற்குத் துவக்கி வைத்தனர். தொடர்ந்து தனியார் அமைப்பின் சார்பில் 25 ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்களை அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.

அமைச்சர் கே.என்.நேரு
குடல் இரைப்பை உள்நோக்கி கருவிகள் இயக்கம்

அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, " பாடப்புத்தகங்கள் திருச்சியில் பற்றாக்குறை என்ற செய்திகள் வந்துள்ளது. அரசு பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதுதான் இதற்குக் காரணம். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நீட் தேர்வுக்கு தகுதியான, முறையான பயிற்சிகளை வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளோம். தேர்வு தேதி என்பது எங்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. கண்டிப்பாக சட்டப் போராட்டம் நடத்தி எதிர் கொள்ளவோம்" என்றார்.

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு

தொடர்ந்து பேசிய அமைச்சர் கே என் நேரு, " தலைநகர் அளவிற்கு திருச்சி மேம்படவில்லை. எனவே சாலைகள் குடிநீர் வசதி, உள்ளிட்டவற்றை மேம்படுத்த உள்ளோம். கோவையை போன்றே திருச்சியையும் சிறந்த நகரமாக மாற்ற ஏற்பாடுகள் செய்து வருகிறோம். அதை நோக்கி பயனித்து வருகிறோம். சென்னை - கோவை - மதுரை என்பதை சென்னை - திருச்சி - கோவை என்று மாற்ற வழிவகை செய்வோம்.

சிந்தாமணி அண்ணா சிலை முதல் நீதிமன்றம் வரை பறக்கும் சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. திருச்சியை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் உள்ளது. சென்னைக்கு நிகராக திருச்சியை மேம்படுத்துவோம்" என்று அமைச்சர் நேரு தெரிவித்தார்.

இதையும் படிங்க : ககன்யான் திட்டம்: இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.