திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜே.ஜே. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 496 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணையினை வழங்கினார்.
இந்த விழாவுக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சவுடாம்பிகா கல்விக்குழும தலைவர் ராமமூர்த்தி, ஆவின் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
தொடக்கக் கல்வி இயக்குநர் பழனிச்சாமி, திருச்சி முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: திருச்சிக்குள் பகல் நேரத்தில் லாரிகளை அனுமதிக்க ஆலோனை