பால் உற்பத்தியாளர்களிடமிருந்து அனைத்து பாலையும் கொள்முதல் செய்ய வேண்டும், பால் உற்பத்தியாளர்களுக்கு 50 விழுக்காடு மானியத்தில் தீவனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் மணப்பாறை ஆவின் நிறுவனம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், அண்ணா காப்பீடு திட்டத்தை அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் உறுதிப்படுத்த வேண்டும், கறவை மாடு வாங்க கடனை வட்டியில்லாமல் வழங்க வேண்டும், சத்துணவுத் திட்டத்தில் பாலை சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் எழுப்பினர்.
பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பியும், பாலை சாலையில் கொட்டியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பொருளாதார இட ஒதுக்கீட்டை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார்' - வி.பி. துரைசாமி குற்றச்சாட்டு