ETV Bharat / state

சாலை விரிவாக்கப் பணிக்கு வியாபாரிகள் எதிர்ப்பு

திருச்சி: சாலை விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் மனு அளித்தனர்.

சாலை விரிவாக்கப் பணிக்கு வியாபாரிகள் எதிர்ப்பு
சாலை விரிவாக்கப் பணிக்கு வியாபாரிகள் எதிர்ப்பு
author img

By

Published : Feb 10, 2021, 3:13 PM IST

திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, பழைய பால் பண்ணை முதல் துவாக்குடி வரை சாலை விரிவாக்கப் பணி நடைபெற உள்ளது.

சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சாலை அமைப்பதற்காக பழைய பால் பண்ணை முதல் துவாக்குடி வரை சாலையின் ஓரம் உள்ள வர்த்தக நிறுவனங்களை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், பழைய பால் பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பு மக்கள் கோரி வருகின்றனர். அதே சமயம் இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் வியாபாரிகள், குடியிருப்பு வாசிகள் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சை மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுத்தாமல் செல்லும் வகையில் உள்ளது. அதே போல் பறக்கும் பாலம், இந்த வழித்தடத்தில் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: காடுகள் அழிப்பால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறதா?- கோவையில் ஓர் கள ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.