திருச்சி மாநகரில் செயல்படும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக மாநகர காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் திருச்சி உறையூர் அண்ணாமலை நகரில் உள்ள உனா ஸ்பா, தில்லை நகரில் உள்ள குப்தா ஸ்பா, வேதா ஸ்பா, ஆர்சிட் ஸ்பா, டிவிஎஸ் டோல்கேட்- பொன்மலை ஜி கார்னர் சர்வீஸ் சாலையில் உள்ள சன் பியூட்டி ஸ்பா ஆகிய ஐந்து மசாஜ் சென்டர்களில் காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தனர்.
இந்தச் சோதனையில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பெண்கள் உள்பட 10 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 12 பெண்களை மீட்க காவல் துறையினர், அவர்களை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கே.கே. நகர், தில்லை நகர், உறையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி என்கிற சூர்யாவும் (34) ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருடனை விரட்டியடித்த காவலாளி - சிசிடிவி வெளியீடு