ETV Bharat / state

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டும் - மணியரசன் கோரிக்கை... - திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 29வது நாளாக உண்ணாவிரதம்

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் குற்ற வழக்கு இல்லாத ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் அமைப்பின் தலைவர் மணியரசன் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்க - ஸ்டாலினுக்கு மணியரசன் கனிவுடன் கோரிக்கை...

author img

By

Published : Jun 16, 2022, 9:42 AM IST

Updated : Jun 16, 2022, 1:07 PM IST

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் சிறை உள்ளது. வெளிநாடுகளிலிருந்து கடவுச்சீட்டு (Passport) உள்ளிட்ட உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் தங்கியவர்கள் கைது செய்யப்பட்டு இந்த முகாமில் அடைக்கப்படுவார்கள்.

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள் 29-ஆம் நாளாக உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்கிறார்கள். உண்ணாவிரத போராட்டத்தில் இருந்தவர்களில் சிலர் மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இது குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் அமைப்பின் தலைவர் மணியரசன் அறிக்கை மூலமாக தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார். அதில், "திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் மொத்தம் 115 பேர் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து அவ்வழக்குகள் நீதி மன்றங்களில் விசாரிக்கப்படவில்லை. வெறுமனே தடுப்புக் காவலில் வைத்திருக்கிறார்கள்.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 29வது நாளாக உண்ணாவிரதம்

வழக்குகளோ – விசாரணையோ இல்லாமல் சிறையில் அடைத்து வைத்திருப்பதால், இவர்களை சிறப்பு முகாமில் வைத்திருப்பதாக இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் தந்திரமாகப்பெயர் சூட்டி ஏமாற்றுகின்றன. இவ்வாறு பல ஆண்டுகள் தொடர்ந்து திருச்சி நடுவண் சிறை முகாமில் பலர் இருக்கிறார்கள்.

இவர்களின் உண்ணாப் போராட்டத்தின் மிக முக்கியமான கோரிக்கைகள் இரண்டு. ஒன்று குற்ற வழக்கு உள்ளவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடத்துங்கள். நீதி மன்றம் தண்டனை வழங்கட்டும் அல்லது விடுதலை செய்யட்டும். குற்ற வழக்கு இல்லாதவர்களைத் தமிழ்நாடு அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும் மிக நீதியான இந்த இரு கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு ஏற்று செயல்படுத்துவதில் என்ன தடை? இந்திய அரசு தடை போடுகிறதா?

இந்தச் சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் மேற்கண்ட இரு கோரிக்கைகளை முன்வைத்துக் கடந்த சில ஆண்டுகளில் இவ்வாறான உண்ணாப் போராட்டங்கள் நடத்தினர். அப்போதெல்லாம் உயர் அதிகாரிகள், நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவது அல்லது விடுதலை செய்வது என்ற இரண்டில், யார் யாருக்கு எது பொருந்துமோ அந்த நீதியைச் செய்கிறோம் என்று உறுதி கொடுத்து உண்ணாப் போராட்டத்தை முடித்து வைத்துள்ளார்கள்.

ஆனால் அந்த வாக்குறுதிகளைத் தமிழ் நாடு அரசு செயல்படுத்தவில்லை. நீதிமன்ற நடைமுறையே இல்லாமல் ஈழத்தமிழர்களோ அல்லது வேறு எந்த நாட்டினரோ அவர்களை “சிறப்பு முகாம்” என்று அட்டை எழுதித் தொங்கவிடப்பட்டுள்ள சிறைக்குள் காலவரம்பின்றி அடைத்து வைப்பது இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 21க்கு எதிரானது.

ஓர் அரசே இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுமானால் அந்த நாட்டில் மண்ணின் மக்களுக்கான மனித உரிமைகளும் இதேபோல்தான் பறிக்கப்படும். அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான இச்செயலைச் செய்யுமாறு ஒருவேளை இந்திய அரசு கூறினால் அதை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. இவர்களது கோரிக்கைகளை ஆதரித்து எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடந்த 6.6.2022 அன்று திருச்சி தொடர்வண்டிச் சந்திப்பு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தியது என்பதையும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

ஸ்டாலினுக்கு மணியரசன் கனிவுடன் கோரிக்கை
ஸ்டாலினுக்கு மணியரசன் கனிவுடன் கோரிக்கை

இதில் முதலமைச்சர் தலையிட்டு, திருச்சி நடுவண் சிறைச் சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவித்து, வெளியே அனுப்ப வேண்டியவர்களை அனுப்புங்கள், வழக்கு நடத்த வேண்டிய ஈழத்தமிழர்களை ஏதிலியர்கள் முகாம்களில் தங்க வைத்து வழக்கு நடத்துங்கள் என்று கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'இலங்கை அதிபராக யார் வந்தாலும் ஈழ தமிழர்களுக்கு விரோதமாகவே இருப்பார்கள்' - வைகோ

Last Updated : Jun 16, 2022, 1:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.