திருச்சி: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலனின் உடல், திருச்சி சீராத்தோப்பில் உள்ள பாரத பண்பாட்டு பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நினைவிடத்திற்கு மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் இன்று (ஜூன் 08) வருகை தந்தார். அப்போது அவர் ராம கோபாலன் புகைப்படத்தை பார்த்ததும் தேம்பி, தேம்பி அழுதார். உடனே அருகில் இருந்த இந்து முன்னணியினர் அவரை ஆசுவாசப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
முன்னதாக அவரது திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தி, சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என்று சொல்லி வருகிறது என்ற கேள்விக்கு, 'நான் ஆளுநராக வந்திருக்கிறேன். இதற்கு என்னால் பதில் சொல்ல இயலாது' என கூறிவிட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: 'வீரம் விளைந்த மண் சிவகங்கை; இங்கு நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்'