ETV Bharat / state

திருச்சி வந்த 385 வெளிநாட்டு பயணிகள் - ஈரோடு நபருக்கு கரோனா அறிகுறி! - Corona Virus

திருச்சி: வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 385 பயணிகளில் ஒருவருக்கு கரோனா அறிகுறி இருப்பதால், தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Man Who Came From Malaysia to Trichy Had the Symptoms of Corona

author img

By

Published : Mar 22, 2020, 9:43 PM IST

பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதன்படி இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு நடைபெற்றுவருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்த ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த வகையில் திருச்சியில் அனைத்து வகையான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அடைக்கப்பட்டுள்ளன. இதனால் திருச்சி மாநகர் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை ஏற்றிவரும் விமானங்கள் வந்து செல்கிறது.

இந்த வகையில் இன்று காலை சிங்கப்பூரில் இருந்து 163 பயணிகளும், சார்ஜாவில் இருந்து 136 பயணிகளும், துபாயில் இருந்து 86 பயணிகளும் திருச்சி வந்தனர். இதில் மொத்தம் 385 பயணிகளுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. அதில் 12 பெண்கள் உட்பட 22 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தது.

இதையடுத்து அவர்கள் திருச்சி கள்ளிக்குடியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக சிகிச்சை வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை நடைபெற்றது. அதில் அவர்கள் யாருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகவில்லை.

எனினும் அதில் மலேசியாவிலிருந்து வந்த ஈரோட்டைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டும் வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறி இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரத்தப் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அவருக்கு கரோனா தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியவரும்.

அவரை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதேபோல் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து வரும் விமான பயணிகள் மருத்துவ குழுவினரின் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா பீதி: காத்து வாங்கும் மெரினா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.