ETV Bharat / state

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவர் கைது - Crime news in trichy

திருச்சி: சமயபுரம் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

லாட்டரி விற்பனை
லாட்டரி விற்பனை
author img

By

Published : Nov 4, 2020, 6:07 PM IST

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில், சமயபுரம் எல்லையில் காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருவது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் லாட்டரி விற்பனை செய்த சமயபுரம் சக்தி நகரைச் சேர்ந்த சேகர் (43), மாகாளிக்குடி வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த வாசு (42) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் அவர்கள் லாட்டரி சீட்டு குறித்த விவரங்களைத் தெரிவிப்பதற்காக பயன்படுத்திய 2 ஆண்ட்ராய்டு செல்போன்கள் மற்றும் 720 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.