திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சென்ற லாரி ஒன்று, தாழ்வான மின்கம்பியில் உரசியதால் மினி லாரியிலிருந்த சோள தட்டை தீப்பிடித்து ஏரிந்தது.
இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், மின்னல் வேகத்தில் செயல்பட தொடங்கினர். அவர்கள் துரிதமாக செயல்பட்டு லாரி சேதம் அடையாமல் பத்திரமாக மீட்டனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், "துவரங்குறிச்சியின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற தாழ்வாக செல்லும் மின் கம்பிகளின் உயரத்தை, மின் வாரியம் உடனடியாக அதிகப்படுத்த வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ரஜினியின் மரண மாஸ் பாடலில் கரோனா விழிப்புணர்வு - அசத்திய காவலர்!