ETV Bharat / state

நின்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து மீது லாரி மோதல்: 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

author img

By

Published : Feb 25, 2021, 10:23 AM IST

திருச்சி: மணப்பாறை அருகேயுள்ள கரட்டுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த அரசுப்பேருந்தின் மீது லாரி பலமாக மோதியதால் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து
தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கரட்டுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பாலவிடுதியிலிருந்து மணப்பாறை நோக்கிவந்த அரசு நகரப் பேருந்து, பயணிகளை ஏற்றுவதற்காக நின்றுகொண்டிருந்தது.

அப்போது அவ்வழியே, திருச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த லாரி, அரசுப் பேருந்தின் பின்பக்கதில் பலமாக மோதியது. பெரும் சேதமடைந்த அரசுப் பேருந்து, சுமார் நாற்பது அடி தூரம் தள்ளப்பட்டு, சாலையின் பக்கவாட்டிலுள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது.

இதனையடுத்து பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள், காயமடைந்த இருபதுக்கும் மேற்பட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து வையம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.