மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுர்ஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது 30 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. சுமார் ஒன்பது மணிநேரத்திற்கும் மேலாக குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் கண்டுபிடித்த தனித்துவமான கருவி மூலம் நடந்து வந்த பணியில் சில சிக்கல் ஏற்பட்டதால், ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் மீண்டும் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் தோண்டும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பக்கவாட்டில் தோண்டுவதால் ஏற்படும் அதிர்வுகளால் குழந்தை கீழ் நோக்கி செல்வதாகக் கூறப்படுகிறது. இதனால் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் தோண்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆழ்துளை கிணற்றில் உள்ள குழந்தை சுஜித்தை மீட்க ஐஐடியிலிருந்து மேலும் ஒரு குழு வருகை தருகிறது. ஐஐடி குழுவினரால் கொண்டுவரப்பட்டுள்ள நவீன சாதனங்கள் மூலம் குழந்தையை மீட்க தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.