திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே அணியாப்பூர் பகுதியில் அனுமதியின்றி மதுபானம் விற்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தனிப்படை காவல் துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில், அனுமதியின்றி அரசு மதுபானம் விற்ற அணியாப்பூரைச் சேர்ந்த சரஸ்வதி (70), முத்துசாமி மகன் சுப்பிரமணி (41) ஆகிய இருவரைக் கைதுசெய்தனர். இதில், அவர்களிடமிருந்து 333 மதுபாட்டில்களைப் பறிமுதல்செய்தனர்.
இதேபோல், மணப்பாறை அருகே வீரப்பூரில் அனுமதியின்றி மதுபானம் விற்றதாக சேட்டு மனைவி தமிழரசி (45) என்பவரைக் கைதுசெய்து அவரிடமிருந்து 66 மதுபாட்டில், 3160 ரூபாய் கைப்பற்றப்பட்டன.
மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.43 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்