ETV Bharat / state

கிணற்றில் தவறி விழுந்த மணப்பெண்ணின் அண்ணன் உயிரிழப்பு: சோகத்தில் மூழ்கிய கிராமம்!

திருச்சி: குருவம்படியைச் சேர்ந்த மீனா என்பவரது திருமணம் இன்று நடக்கவிருந்த நிலையில் அவரது அண்ணன் நேற்று எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trichy sister marriage stopped due to brother death
author img

By

Published : Nov 4, 2019, 7:09 PM IST

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குருவம்பட்டியைச் சேர்ந்தவர் தனபால். பெயிண்டராக பணிபுரியும் இவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர். இதில் முதல் இரண்டு சகோதரிகளுக்குத் திருமணம் முடிந்த நிலையில் கடைசி சகோதரி மீனாவிற்கு தனபால் திருமண ஏற்பாடு செய்துள்ளார்.

இன்று சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வைத்து திருமணம் நடக்கவிருந்த நிலையில் நேற்று மாப்பிள்ளை வீட்டார் பெண் அழைக்க குருவம்பட்டி வந்திருந்தனர். அப்போது, மாப்பிள்ளை வீட்டாருக்குச் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தனபால் எதிர்பாராத விதமாக வீட்டின் அருகே மூக்கையன் என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தார்.

குருவம்பட்டி கிராம மக்கள் சோகம்

கிணற்றில் நீர் இல்லாததால் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவலர்கள் தனபாலின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனபால் இறந்ததால் அவரது தங்கைக்கு இன்று நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அந்த கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

இதையும் படிங்க: பழங்குடியினருக்கு 9% இட ஒதுக்கீடு வேண்டும் - அய்யாக்கண்ணு கோரிக்கை

Intro:திருச்சி அருகே அண்ணன் திடீரென மரணம் அடைந்த காரணத்தால் தங்கையின் திருமணம் நிறுத்தப்பட்டதால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.Body:

திருச்சி:
திருச்சி அருகே அண்ணன் திடீரென மரணம் அடைந்த காரணத்தால் தங்கையின் திருமணம் நிறுத்தப்பட்டதால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே குருவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். விவசாயி. இவரது மனைவி செல்லத்தாயி. இர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். இதில் மகன் தனபால் (29) பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இரண்டு மூத்த சகோதரி களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இந்நிலையில் கடைசி சகோதரியான தனபாலின் தங்கை மீனாவுக்கும் உறவுக்காரான திருச்சி மாவட்டம், முசிறி அருகே உடையான்பட்டியைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் குமரனுக்கும் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டு இருந்தது. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலயில் நேற்று மாலை மாப்பிள்ளை வீட்டார் பெண் அழைப்பிற்க்காக பெண் வீட்டிற்க்கு வந்திருந்தனர். அப்போது தனபால் சமையல் வேலைகளில் ஈடுப்பட்டிருந்தார்.
திருமண வேலைகளில் ஈடுப்டிருந்த போது வீட்டின்அருகேயுள்ள மூக்கையன் என்பவருக்கு சொந்தமான தண்ணீர் இல்லாத கிணற்றில் தனபால் தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
தகவலறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அண்ணன் இறந்ததால் இன்று நடக்கவிருந்த மீனா-குமரன் ஆகியோரது திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.