திருச்சி: மணப்பாறை அருகேவுள்ள வீரப்போரிட்டு மாண்ட இடமான வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயிலிலும், கோட்டை கட்டி வாழ்ந்த பொன்னிவளநாட்டிலும் பிப்.20ஆம் தேதி முதல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி இன்று (பிப்.26) நடந்தது.
அதில், “பொன்னர் – சங்கர் மன்னர்களின் பெற்றோர்கள் மாண்டுவிட, தங்கை அருக்காணி என்னும் நல்லதங்காளின் ஆற்றாமையை போக்க பொன்னர் கிளி பிடிக்க, வீரமலை பகுதிக்குச் சென்று கிளி வேட்டை நடத்தி தங்கைக்கு கிளி பிடித்து தந்த வீர வரலாற்று நிகழ்வு” பொன்னிவளநாட்டில் இன்று நடைபெற்றது.
பொன்னர் – சங்கர் அடுத்தடுத்த ஏழு வனங்களில் ஒன்றன்பின் ஒன்றாக கிளியை தேடி கிளி அங்கு இல்லாததால் வனங்களை துவம்சம் செய்துவிட்டு, இறுதியில் ஆலமரத்தில் கிளியை கண்டுபிடித்தது. அதை பக்தர்களிடம் காட்டியபோது பக்தர்கள் மகிழ்ச்சியடைந்து தங்களின் சந்தோசத்தை வெளிப்படுத்தினர். பின்னர் அந்த கிளியை தங்கையிடம் ஒப்படைக்கிறார் பொன்னர்.
இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க: கையில் வாணவேடிக்கை வெடித்த இளைஞர் - வைரலாகும் வீடியோ