ETV Bharat / state

ஆன்லைன் மூலம் மது விற்பனை: அரசுக்கு ஐடியா கொடுக்கும் கார்த்தி சிதம்பரம் - திருச்சி மாவட்டச் செய்திகள்

திருச்சி: 45 நாள்கள் மதுபானக் கடைகளை மூடியது தவறு என்றும், இனிவரும் காலங்களில் ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்பனை செய்யவேண்டும் என்றும் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

karthi chidambaram  govt should sale the liquor in online platform  ஆன்லைன் மதுவிற்பனை கார்த்திக் சிதம்பரம்  online liquor sale  govt should sale the liquor in online  Karti Chidambaram online liquor sale  திருச்சி மாவட்டச் செய்திகள்  trichy district news
ஆன்லைன் மூலம் மது விற்பனை: அரசுக்கு ஐடியா கொடுக்கும் கார்த்தி சிதம்பரம்
author img

By

Published : May 10, 2020, 4:44 PM IST

காங்கிரஸ் கட்சி சார்பில் கரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி பிச்சாண்டவர் கோவில் பகுதியில் இன்று நடந்தது. இதில், சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டு நிவாரண உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கலை, முன்னாள் மேயர் சுஜாதா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், "பூரண மதுவிலக்கு என்பது உலக அளவில் தோல்வியடைந்த விஷயமாகும். அமெரிக்காவிலும் இது தோல்வியை சந்தித்துள்ளது. ஈரானிலும் பூரண மதுவிலக்கு சாத்தியப்படவில்லை. குஜராத்திலும் ஏட்டளவில்தான் பூரண மதுவிலக்கு இருக்கிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் மாபியாக்கள் தலை தூக்கி விடுவார்கள். கள்ளச்சாராயம் பெருக்கெடுக்கும்.

மாபியாக்கள் உருவானால் பல்வேறு பிரச்னைகள் உருவாகும். அதனால் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை. டாஸ்மாக் மதுபானக் கடைகளை கடந்த 45 நாட்களாக பூட்டி இருக்கவே கூடாது. குறைந்தபட்சம் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் அதாவது 11 மணி முதல் 1 மணி வரை மதுபானங்களை விற்பனை செய்திருக்க வேண்டும்.

கார்த்தி சிதம்பரம் பேட்டி

அவ்வாறு செய்திருந்தால் ஒரே நாளில் கூட்டம் கூடுவதை தவிர்த்திருக்கலாம். அதேபோல் ஆரம்பத்திலிருந்தே ஆன்லைன் மூலமும் மது விற்பனை செய்திருக்க வேண்டும். அதனால் எதிர்வரும் காலங்களில் ஆன்லைன் மூலம் மது விற்பனையை தொடர வேண்டும்.

அதேபோல் ஸ்மார்ட் கார்டு மூலமாக பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தின் மூலம் மது விற்பனை செய்யவேண்டும். பண பரிமாற்றத்தில் மது விற்பனை செய்யப்படுவதால், ஊழல் அதிகளவில் நடக்கிறது. கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்காலத்தில் ஆன்லைனில் மது வாங்கும் முறையை கற்றுக் கொள்வார்கள். அது மிகவும் எளிது.

தற்போது தொடர்வண்டிக்குக் கூட அனைவரும் ஆன்லைன் மூலமே டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். அதேபோல் கோயில், பள்ளிகள் அருகில் உள்ள மதுபான கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். மது கூடத்தையும் (பார்) தடை செய்ய வேண்டும். நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்ற புகார்களின் அடிப்படையில்தான் நீதிமன்றம் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதுதான். மதுபானம் வாங்க ஆதார் கார்டை கட்டாயமாக்க வேண்டும். அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 21 வயது நிரம்பியவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: நீ சரக்க மட்டும் குடு தல... நாங்க டோக்கன போடுறோம் எங்க ஸ்டைல்ல...

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.