ETV Bharat / state

காஷ்மீரில் பாஜக அரசு ஜனநாயக படுகொலையை நிகழ்த்தியுள்ளது: காதர் மொய்தீன்..! - India Union Muslin League Leader

திருச்சி: பெரும்பானமை பலத்தை கையில் வைத்துக்கொண்டு காஷ்மீரில் பாஜக அரசு ஜனநாயகத்தை படுகொலையை நிகழ்த்தியுள்ளது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் குற்றம்சாட்டியுள்ளார்.

காதர் மொய்தீன்
author img

By

Published : Aug 6, 2019, 2:43 AM IST

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இன்று கருப்பு தினமாக அமைந்துவிட்டது. இந்திய தேர்தல் முறையை ஏற்றுக் கொண்டு, இந்திய கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டு, இந்திய பிரதிநிதிகளாக விளங்கிய காஷ்மீர் மக்களை அவமானப்படுத்தும் வகையில், மத்திய பாஜக அரசு மிகக்கொடிய முறையில் அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்துள்ளது.

அதோடு அந்த மாநிலத்தில் 70 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்த சிறப்பு அந்தஸ்தும் நீக்கப்பட்டு இருக்கிறது. சிறப்பு அந்தஸ்து என்பது காஷ்மீர் மக்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டதல்ல. நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், திரிபுரா, இமாச்சல் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு மாநிலத்திற்கு மட்டும் சிறப்பு அந்தஸ்தை நீக்குவது என்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

செய்தியாளர்களை சந்திக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன்

காஷ்மீரில் இஸ்லாமியர்கள் அதிகம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? காஷ்மீரில் பிரிவினைவாதம், பயங்கரவாதம் தலைதூக்கியதால் இத்தகைய நடவடிக்கை என்று மத்திய அரசு காரணம் கூறுகிறது. அப்படி பார்த்தால் பல மாநிலங்களில் நக்சலைட் அமைப்புகள் அதிக அளவில் கொடுமைசெய்துள்ளது.

இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களை மாநிலங்களாக அந்தஸ்து உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில், ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு ஆக்கியுள்ளது ஜனநாயக படுகொலையாகும். தங்களது மாநிலத்தை பிரிக்ககோரி காஷ்மீர் மக்கள் கேட்டார்களா? காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்தை நீக்குவோம் என்ற பாஜகவின் கொள்கையை, பெரும்பான்மையை வைத்துக்கொண்டு, சர்வாதிகாரதோடு ஜனநாயகப் படுகொலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றார்.

Intro:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Body:திருச்சி:
சொர்க்க பூமியாக கருதப்படும் காஷ்மீரை நரகமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று காதர்மொய்தீன் கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்,
இந்திய பாராளுமன்ற வரலாற்றில் இன்று கருப்பு தினமாக அமைந்துவிட்டது. இந்திய தேர்தல் முறையை ஏற்றுக் கொண்டு, இந்திய கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டு, இந்திய பிரதிநிதிகளாக விளங்கிய காஷ்மீர் மக்களை அவமானப்படுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு மிகக் கொடிய முறையில் அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களை அமைத்துள்ளது. அதோடு அந்த மாநிலத்தி 70 ஆண்டு காலமாக சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இருக்கிறது. இது பாராளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் மத்தியிலும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பேரிடியாக அமையும் வகையிலும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் இந்த செயல் அமைந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
சிறப்பு அந்தஸ்து என்பது காஷ்மீர் மக்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது அல்ல. நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், திரிபுரா, இமாச்சல பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு மாநிலத்திற்கு மட்டும் சிறப்பு அந்தஸ்தை நீக்குவது என்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. காஷ்மீரில் இஸ்லாமியர்கள் அதிகம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?. காஷ்மீரில் பிரிவினைவாதம், பயங்கரவாதம் தலைதூக்கியதால் இத்தகைய நடவடிக்கை என்று மத்திய அரசு காரணம் கூறுகிறது. அப்படிப் பார்த்தால் பல மாநிலங்களில் நக்சலைட், லெனினிஸ்ட் போன்ற அமைப்புகள் அதிக அளவில் கொடுமை செய்துள்ளது. தீவிரவாத, பயங்கரவாத போக்கும் கொண்டவர்களை ஒதுக்கிவிட்டு ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள அந்த மக்களுக்கு பணியாற்றும் செயலில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வந்தன.
அத்தகைய அரசியல் கட்சிகளின் தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்து எமர்ஜென்சியை பிரகடனப் படுத்தியுள்ளார்கள். இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களை மாநிலங்களாக அந்தஸ்து உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில், ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு ஆக்கியுள்ளது. இது ஜனநாயக படுகொலை. காஷ்மீர் மக்கள் இதை கேட்டார்களா?.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட இருக்கும் சிறப்பு அந்தஸ்தை நீக்குவோம் என்ற பா.ஜ.க.வின் கொள்கையை, பெரும்பான்மையை வைத்துக்கொண்டு, சர்வாதிகாரதோடு ஜனநாயகப் படுகொலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்தியாவுடைய சொர்க்க பூமி என்று கருதப்படும் காஷ்மீர் நரகமாக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. காஷ்மீர் மக்களையும், இந்தியாவையும், இந்திய ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசியல் கட்சிகளுக்கு உள்ளது. ஜனநாயக அரசியல் கட்சிகளும், மக்கள் கொதிப்பும் இதை மாற்றி அமைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம், சர்வதேச நீதிமன்றம் கூட செல்ல முடியும். காஷ்மீரில் எந்த மாற்றம் கொண்டு வந்தாலும் அங்குள்ள சட்டமன்றத்தில் நிறைவேற்றி பரிந்துரை செய்யப்பட்ட பிறகுதான் அமல்படுத்த முடியும் இத்தகைய சூழ்நிலையில் இந்திய அரசியல் சாசனத்தை குழி தோண்டி புதைக்க கூடிய கொடூரமான செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்பதால் இதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டிக்கிறது என்றார்.

Conclusion:இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட முடியும் என்று காதர்மொய்தீன் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.