ETV Bharat / state

கடன் தொல்லை: குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற நகைக்கடை அதிபர்

திருச்சி: தனியார் தங்கும் விடுதியில் விஷம் அருந்தி நகைக்கடை அதிபர் குடும்பத்தினர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைக்கு முயன்ற நகைக்கடை அதிபர்
தற்கொலைக்கு முயன்ற நகைக்கடை அதிபர்
author img

By

Published : Dec 20, 2020, 10:32 PM IST

திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் பெரிய கடை வீதியை சேர்ந்த பலராமன் மகன் ஹரி. இவர் அப்பகுதியில் எஸ்விஆர் நகை கடை, பைனான்ஸ், தானிய மண்டி ஆகியவற்றை நடத்திவருகிறார். இவரும் இவரது குடும்பத்தினர் 5 பேரும் திடீரென தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓராண்டிற்கு முன்பு நடிகை ஓவியா திறந்து வைத்த இந்த நகைக்கடையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், அதைச் சமாளிக்க ஹரி பல்வேறு இடங்களில் கடன் வாங்கினார். ஆனால் கடனை அடைக்க முடியவில்லை.

கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து உள்ளனர். தாராபுரம் காவல் நிலையத்தில் பலராமன், ஹரி மீது மோசடி புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. காவல் துறை விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக பலராமன், தனது குடும்பத்தினருடன் திருச்சி மாவட்டம் லால்குடி, சந்தைப் பேட்டை பகுதியில் உள்ள தனது மருமகள் வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால் அங்கும் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்த அவர்கள் ஊருக்கு புறப்படுவதாக கூறி அங்கிருந்து வெளியேறினர்.

அதன் பின்னர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே துடையூரில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து அதில் பலராமன் ( 75 ), இவரது மனைவி புஷ்பா, மகன் ஹரி ( 38 ), இவரின் மனைவி திவ்யா, இவர்களது மகள் 8 வயதான அசோக்ராதா ஆகியோர் தங்கினர். வேறொரு அறையில் கார் ஓட்டுநர் அய்யப்பன் தங்கியுள்ளார்.

அதிகாலை முனங்கல் சத்தம் கேட்டு மற்றொரு அறையில் தங்கிருந்த கார் ஓட்டுநர், அந்த அறைக்கு சென்று பார்த்த போது 5 பேரும் விஷம் அருந்தி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார்.

இதில் பலராமன், அவரது மனைவி புஷ்பா ஆகியோரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து வாத்தலை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல...

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்: சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104

இதையும் படிங்க: சாலையில் நடந்து சென்றவரை குடிபோதையில் தாக்கிய ரவுடிகள்: வைரல் காணொலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.