ETV Bharat / state

நிதி இல்லாத போது பேனா சிலை வைக்க அவசியமா.. எடப்பாடி பழனிசாமி - நிதி இல்லாத போது பேனா வைக்க அவசியமா

நிதி இல்லாத போது எழுதாத பேனா சிலை வைக்க 80 கோடி அவசியமா என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பேச்சு
எடப்பாடி பழனிசாமி பேச்சு
author img

By

Published : Aug 28, 2022, 5:13 PM IST

திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி வீட்டு இல்ல திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வருகை தந்துள்ளார். திருச்சி விமான நிலையத்திற்கு 11 மணியளவில் வருகை தந்த அவர் விமான நிலையம் அருகே உள்ள வயர்லெஸ் சாலையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தொண்டர்கள் மத்தியில் எழுச்சி உரை ஆற்றினார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உரை:

அதிமுக 30 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்துள்ளது. தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக. தமிழ்நாடு வளம் பெற உதவி செய்தவர்கள் எம்.ஜி‌ஆர்‌, ஜெயலலிதா. திமுக ஆட்சி அமைந்து 15 மாதம் ஆகிறது. திருச்சிக்கு ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை.ஏன் தமிழ்நாட்டிற்கு கூட கொண்டு வரவில்லை.

எடப்பாடி பழனிசாமி பேச்சு

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ரிப்பன் கட் செய்து திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குத்தான் ஸ்டிக்கர் ஒட்டிகிறார்கள். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக முடக்கி வருகிறது. திமுக அரசின் மெத்தனப்போக்கால் திட்டங்கள் முடங்கியுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் கதவணை உடைந்த உடன் 325 கோடி நிதி ஒதுக்கி அணை கொண்டு வந்தோம். அதை முடக்காமால் வேகமாக மக்களின் பயன்பாட்டுக் கொண்டு வாருங்கள்.

சத்திரம் பேருந்து நிலையம், நேப்பியர் பாலம் போல் உள்ள கொள்ளிடம் பாலம் உட்பட அதிமுக கொண்டு வந்தது. ஸ்ரீரங்கம் பகுதியில் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் கொண்டு வர நிதி ஒதுக்கினோம் ஆனால் அந்த திட்டத்தை திமுக அரசு முடக்கியுள்ளது. மகளிர் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம், பொறியல் கல்லூரி சேதுராப்பட்டி, டிஎன்பிஎல், வண்ணத்துப்பூச்சி பூங்கா, யாத்ரி நிவாஸ் இந்த திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக அரசு.

திமுக 15 மாத ஆட்சியில் ஆன்லைன் ரம்மி மட்டும் தான் கொண்டு வந்தீர்கள். அதன் மூலம் பணம் செல்ல வேண்டியவர்களுக்கு சரியாக செல்கிறது. திமுக அரசு போட்டோ சூட்‌ மட்டுமே செய்கிறது. அதை தொலைக்காட்சியில் போடுகிறார்கள். நிதி இல்லாத போது ஏன் எழுதாத பேனா வைக்க வேண்டும். 80 கோடிக்கு போனா அவசியமா.

இதை வைத்து 6 அரை கோடி மக்களுக்கும் பேனா வாங்கி கொடுத்து விடலாம். பேனா வையுங்கள் 1 கோடியில் வையுங்கள் வேணாம் என்று சொல்லவில்லை. இந்த ஆட்சி வந்த பிறகு சொத்து வரி போனஸ், தண்ணீர் வரி, மின் வரி போனஸ் போன்ற போனஸ்கள் வழங்கியுள்ளனர். சொத்து வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

மின் உயர்வு 50% உயர்த்தியுள்ளனர். இப்படி உயர்த்தினால் மக்கள் எப்படி தாக்கு பிடிப்பார்கள். திமுக அரசு நிதி இல்லை என்று சொல்கிறார் இதை தெரிந்து தானே உங்கள் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. நிறைவேற்ற முடியாத திட்டம் உரிமைத் தொகை 1000 ரூபாய் கைவிரித்துவிட்டராகள். கேஸ் சிலிண்டர் மானியம் 100, கல்வி வங்கி கடன் ரத்து எதையுமே செய்யவில்லை.

விவசாய கடன் நான் முதலமைச்சராக இருக்கும் போது ரத்து செய்தேன். விவசாயிகளுக்கு இழப்பீடுகள் தொகை அதிகமாக கொடுத்தது அதிமுக. மழை வெள்ளத்தால் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை எந்த அமைச்சரும் பார்க்கவில்லை. குடிமராமத்து பணி செய்து விவசாயத்தை காப்பாற்றினோம். பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளை அமைத்தது அதிமுக.

எந்த கொம்பனாலும் அதிமுகவை தொட்டு பார்க்க முடியாது. சிலர் வேண்டுமென்றே திமுகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக எதிர்க்கபார்க்கிறார்கள் அது ஒரு போதும் நடக்காது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியுடன் நான் உங்களுடன் பயணிக்கிறேன். சிலர் 10% பொதுக்குழு உறுப்பினர்கள், 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் இருந்தார்கள் உங்கள் விருப்பப்படி சேர்த்தோம். ஆனால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.

நம்பிக்கையில்லா தீர்மானம் வந்த போது எதிர்த்து வாக்களித்தார் தான் அவர். இவர் அம்மா விசுவாசி என்கிறார். நான் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன் நான் தான் ஜெயலலிதா விற்க்கு விசுவாசமாக இருந்தேன். அவர்‌எதிர் தரப்பில் நின்றார். அவர் எப்படி விசுவாசி என்கிறார்.

அதிமுக அலுவலத்தை உடைத்தவர் இவரை எப்படி இணைக்க முடியும். அவர் முன்னிலையில் இருந்து செய்கிறார். நான் கட்சியை உயர்வாக நினைக்கிறேன். அவர்கள் வியாபாரமாக நினைக்கிறார்கள். இவரை போல எத்தனை பேர் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்றார்.

இதையும் படிங்க: அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.