ETV Bharat / state

சிவானி பொறியியல் கல்லூரியில் ஆறாவது பட்டமளிப்பு விழா - சிவானி பொறியியல் கல்லூரி

திருச்சி: "இரண்டு பட்டங்கள் பெற்றவர்கள் கூட வேலையின்றி சுற்றித்திரியும் அவலம் உள்ளது" என்று,  இந்தியன் வங்கியின் மேலாளர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

சிவானி பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
author img

By

Published : May 12, 2019, 7:56 PM IST

திருச்சி சிவானி பொறியியல் கல்லூரியின் தலைவர் தலைமையில் ஆறாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியன் வங்கியின் திருச்சி பிராந்திய துணை பொது மேலாளர் சுவாமிநாதன் கலந்துகொண்டு 175 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், "வாழ்க்கையில் சிலர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். நோக்கமும், இலக்கும் இல்லாத காரணத்தால் இரண்டு பட்டங்கள் பெற்றவர்கள் கூட வேலை இன்றி சுற்றித்திரியும் அவலம் உள்ளது. திட்டமிடாததும், முயற்சி செய்யாததும்தான் பலரது தோல்விக்கு காரணமாக உள்ளது. தவறுகள் செய்வதன் மூலமே அனுபவம் பெறமுடியும். அதனால் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். மாணவர்கள் எப்போதும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடாது. நமது அறிவுத்திறன் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் செயலாற்ற வேண்டும்" என்றார்.

Intro:திருச்சி அருகே உள்ள சிவானி பொறியியல் கல்லூரியில் 6வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது

Body:திருச்சி:
இரண்டு பட்டங்கள் பெற்றவர்கள் கூட வேலை இன்றி சுற்றித்திரியும் அவலம் உள்ளது என்று பட்டமளிப்பு விழாவில் வலியுறுத்தப்பட்டது.

திருச்சி சிவானி பொறியியல் கல்லூரியின் 6வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியன் வங்கியின் திருச்சி பிராந்திய துணை பொது மேலாளர் சுவாமிநாதன் கலந்துகொண்டு 175 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், வாழ்க்கையில் சிலர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். திட்டமிடாததும், முயற்சி செய்யாததும்தான் பலரது தோல்விக்கு காரணமாக உள்ளது. அதனால் தொடர் முயற்சி அவசியம். முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடாது. தவறுகள் செய்வதன் மூலம் இரண்டு மடங்கு அனுபவம் கிடைக்கும். அதனால் மனம் தளராமல் முயற்சி செய்ய வேண்டும். உழைப்பும், நன்றி உணர்வும் அவசியம். பட்டம் பெறும் மாணவ மாணவிகள்சாதனையாளர்களாக மட்டும் இருக்கக்கூடாது. சிறந்த சாதனையாளர்களாக இருக்க வேண்டும். அனைவருக்கும் அறிவு திறன் உள்ளது. ஆனால் அதை சரியான முறையில் பயன்படுத்துவது கிடையாது. நோக்கமும், இலக்கும் இல்லாத காரணத்தால் இரண்டு பட்டங்கள் பெற்றவர்கள் கூட வேலை இல்லாமல் சுற்றித் திரியும் நிலை உள்ளது. மூளையும், இதயமும் சார்ந்த கல்வி தான் உண்மையான கல்வியாக இருக்க முடியும். பட்டம் மட்டுமே பயனளிக்காது. நமது அறிவுத்திறன் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் செயலாற்ற வேண்டும். நமது வரலாற்றின் அடிச்சுவடை மறந்துவிடுகிறோம். இது தவறான செயலாகும். வரலாற்றில் பதிவுகளை ஏற்படுத்தும் வகையில் வாழ வேண்டும் என்றார்.
இந்த விழாவில் கல்லூரியின் பொருளாளர் பிரபாகரன், செயலாளர் விக்னேஸ்வரன், முதல்வர் கணேசன் சாந்தி மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Conclusion:விழாவில் 175 மாணவ மாணவிகளுக்கு பொறியியல் பட்டம் வழங்கப்பட்டது. இதில் 3 பேர் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.