ETV Bharat / state

திருச்சியில் நவீன வசதிகளுடன் காவல் கண்காணிப்பு கோபுரம் திறப்பு: என்னென்ன சிறப்பம்சம் தெரியுமா?

திருச்சியில் முதல்முறையாக காவலர்களுக்காக நவீன வசதிகளுடன் கூடிய போக்குவரத்து காவல் கண்காணிப்பு கோபுரத்தை எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்.

Inauguration of traffic police watchtower
திருச்சியில் நவீன வசதிகளுடன் காவல் கண்காணிப்பு கோபுரம் திறப்பு
author img

By

Published : Jun 2, 2023, 1:57 PM IST

திருச்சி: தற்போது திருச்சி மாநகர் முழுவதும் தேவையான அனைத்து இடங்களிலும் போக்குவரத்து சிக்னல்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் கட்டாயம் பணியில் ஈடுபட வேண்டிய நிலை உள்ளது. ஆகையால் இந்த பணியில் உள்ள போலீசாருக்கு, இயற்கை உபாதைகளுக்குச் செல்லவும், மழை நேரங்களில் ஒதுங்கவும் முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனா்.

இதனையறிந்த திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தனியாா் நிறுவனங்களின் பங்களிப்புடன் நவீன வசதிகளுடன் கூடிய அறைகளுடனான போக்குவரத்து மையங்களை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வந்தார். இதன் முதற்கட்டமாக, காந்திச் சந்தை பகுதியில் அதிநவீன போக்குவரத்து காவல் கண்காணிப்பு கோபுரம் கட்டமைக்கப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்: சுமார் 20 அடி உயரத்தில் இரும்புத் தூண்களைக் கொண்டு கட்டுமானம் அமைத்துள்ளனர். இதில், தரைப்பகுதியிலிருந்து 8 அடி உயரத்தில் கழிப்பறை, அதற்குமேல் 4 அடி உயரத்துக்கு தண்ணீா்தொட்டி, அதற்கு மேல் 8 அடி உயரத்துக்கு உள்ளே இருந்த படியே சாலையை கண்காணிக்கும் வகையில் 4 புறங்களிலும் குளிா்சாதன வசதியுடன் கூடிய அறை, அங்கு செல்வதற்குப் படிக்கட்டு ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாட்டிலேயே முதல்முறையாகத் திருச்சியில் தான் இத்தகைய நவீன போக்குவரத்து காவல் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 12 சிக்னல்களிலும் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளைக் காவல் கோபுரத்தில் உள்ள அறையிலிருந்து அகண்ட திரையில் பாா்க்கும் வகையில் பிரமாண்ட திரை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

இது‌ தவிர, ரிமோட் மூலம் இயங்கும் வகையிலான சிக்னல்களும் அமைக்கப்பட உள்ளன. இவை அனைத்திற்கும் தேவையான சூரிய மின்சக்தி பெறுவதற்கான கட்டமைப்பு வசதிகள் மேற்பரப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நவீன காவல் கண்காணிப்பு கோபுரத்தைக் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நேற்று திறந்து வைத்தாா்.

இந்நிழ்வில், மாநகராட்சி துணை மேயா் ஜி.திவ்யா, மண்டலத் தலைவா் மு.மதிவாணன் மற்றும் போக்குவரத்து போலீசார் என பலரும் கலந்து கொண்டனா். இதே போன்று கண்காணிப்பு கோபுரம் திருச்சியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் திறக்க திட்டம் உள்ளதாகவும் என தெரிவித்தனர்.

அதாவது சஞ்சீவி நகா், திருவானைக்காவல், ஒத்தக்கடை, கெயிட்டி திரையரங்க சிக்னல், புத்தூா் நான்குசாலை, பால்பண்ணை, நாச்சியாா்கோவில் சந்திப்பு, ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம், யாத்ரீ நிவாஸ், குமரன்நகா், நீதிமன்றம் எம்ஜிஆா் சிலை, தலைமை அஞ்சல் நிலைய சந்திப்பு, ரயில்வே ஜங்ஷன், ஏா்போா்ட் வயா்லெஸ் சாலை, அரிஸ்டோ ரவுண்டானா, மரக்கடை எம்ஜி.ஆா் சிலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன போக்குவரத்து காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலையில் காரை குறிவைத்து கொள்ளை - காவல் துறை அளித்த விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.