திருச்சி மாவட்டம் உறையூர் காசிசெட்டித்தெருவை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் வளர்த்துவந்த ஆடுகளில் இரண்டினை அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர் சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் விரக்தி அடைந்த சரவணன், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது கையில் ஆட்டுக்குட்டி ஒன்றை தூக்கி வந்திருந்தார் அந்த ஆட்டுக்குட்டியின் கழுத்தில் 'எனது அம்மா அண்ணனைக் காணோம்' என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டை ஒன்று தொங்க விடப்பட்டிருந்தது.
இந்நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இருந்த பலரது கவனத்தையும் ஈர்த்தது. பின்னர் செய்தியாளரிடம் பேசிய சரவணன், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடுபோன தனது ஆடுகளை விரைவில் மீட்டுத் தருமாறும், ஆடுகளை கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: விபத்து ஏற்பட்டது போல் நடித்து நூதன கொள்ளையடித்த கும்பல் கைது!