ETV Bharat / state

திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 18 ஜோடிகளுக்கு இலவச திருமணம்!

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 18 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

Free marriages
Free marriages
author img

By

Published : Dec 4, 2022, 2:25 PM IST

திருச்சி: ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், இலவச திருமணங்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் பல்வேறு திருக்கோயில்களில் இன்று(டிச.4) அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணங்கள் நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஜோடிகளுக்கு, திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் திருமணம் நடைபெற்றது. அமைச்சர் கே.என்.நேரு கலந்துக் கொண்டு திருமணங்களை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார். மணமக்களுக்கு 3 கிராம் தங்கத் தாலி மற்றும் திருமண சீர்வரிசைப் பொருட்களையும் வழங்கினர். மணவிழாவில் பங்கேற்ற உறவினர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன், சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் கல்யாணி, அரசு அதிகாரிகள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இதையும் படிங்க:Muthavarin Mugavari: மனுதாரர்களிடம் நேரடியாக பேசிய முதல்வர் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.