ETV Bharat / state

திருச்சிக்கு வந்த 30 டன் எகிப்து வெங்காயம்

author img

By

Published : Dec 9, 2019, 3:26 PM IST

திருச்சி: எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 30 டன் பெரிய வெங்காயம் திருச்சி வந்தது. எனினும் இதை யாரும் வாங்க ஆள் இல்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Imported egypt onion
Imported egypt onion

நாடு முழுவதும் வெங்காய விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் வட்டாரத்திலும் வெங்காய விலை பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் எகிப்து நாட்டில் இருந்து கப்பல் மூலம் குளிர்சாதன கண்டெய்னர்களில் அடைக்கப்பட்ட வெங்காயம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வந்தடைந்தது. மும்பையில் இருந்து மூன்று லாரிகள் மூலம் 30 டன் வெங்காயம் இன்று காலை திருச்சி வந்தது. திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காயம் மண்டியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி வெங்காய மண்டி

ஏற்கனவே ஒரு கிலோ 140 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை கிலோ 100 ரூபாய்க்கு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். ஆனால் வெங்காயம் வழக்கமான நிறத்திலிருந்து மாறி இருப்பதால் சில்லரை வியாபாரிகள் இதை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இதனால் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் அப்படியே தேங்கி கிடக்கிறது என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருச்சி வெங்காய மண்டியில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் சில்லரை வியாபாரிகள் தினசரி 500 டன் வெங்காயத்தை கொள்முதல் செய்வார்கள். இதுதவிர கர்நாடகாவில் இருந்து 150 டன் வெங்காயம் 15 லாரிகள் மூலம் திருச்சி வந்துள்ளது. திருச்சி சுற்றி உள்ள உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து 25 டன் வெங்காயம் வந்துள்ளது. இவை அனைத்தும் இங்கே விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

இதுகுறித்து திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்க செயலாளர் தங்கராஜ் கூறுகையில், 'வரும் ஜனவரி மாதம் முதல் வெங்காய வரத்து அதிக அளவில் இருக்கும். அப்போதுதான் விலை குறைய வாய்ப்பு உள்ளது. அதுவரை இதே நிலைதான் நீடிக்கும்.

வெங்காய மண்டி செயலாளர் பேட்டி

பற்றாக்குறை காரணமாகதான் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. குளிர்சாதன கன்டெய்னர்களில் அடைத்துக்கொண்டு வந்ததால் வெங்காயத்தின் நிறம் மாறி உள்ளது. மற்றபடி அதன் ருசியும், தன்மையும் மாறவில்லை. அதனால் பொதுமக்கள் அச்சமின்றி இதை வாங்கி பயன்படுத்தலாம்' என்றார்.

Intro:எகிப்து நாட்டில் இருந்து 30 டன் பெரிய வெங்காயம் திருச்சி வந்தது. ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்ற போதும் வாங்க ஆள் இல்லாத நிலை உள்ளது. Body:Visual will sent in next file

திருச்சி;
எகிப்து நாட்டில் இருந்து 30 டன் பெரிய வெங்காயம் திருச்சி வந்தது. ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்ற போதும் வாங்க ஆள் இல்லாத நிலை உள்ளது.
நாடு முழுவதும் வெங்காய விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலை உள்ளது. இதனால் பொது மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் வட்டாரத்திலும் வெங்காய விலை பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த வகையில் எகிப்து நாட்டில் இருந்து கப்பல் மூலம் குளிர்சாதன கண்டெய்னர்களில் அடைக்கப்பட்ட வெங்காயம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வந்தடைந்தது. மும்பையில் இருந்து 3 லாரிகள் மூலம் 30 டன் வெங்காயம் இன்று காலை திருச்சி வந்தது.
திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காயம் மண்டியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு கிலோ 140 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை கிலோ 100 ரூபாய்க்கு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். ஆனால் வெங்காயம் வழக்கமான நிறத்திலிருந்து மாறி இருப்பதால் சில்லரை வியாபாரிகள் இதை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் அப்படியே தேங்கி கிடக்கிறது.
திருச்சி வெங்காய மண்டியில் தினசரி 500 டன் வெங்காயம் தேவைப்படும். திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1,000 சில்லரை வியாபாரிகள் திருச்சி வெங்காய மண்டியில் கொள்முதல் செய்வார்கள். இதுதவிர கர்நாடகாவில் இருந்து 150 டன் வெங்காயம் 15 லாரிகள் மூலம் திருச்சி வந்து உள்ளது.
திருச்சி சுற்றி உள்ள உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து 25 டன் வெங்காயம் வந்துள்ளது. இவை அனைத்தும் இங்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்க செயலாளர் தங்கராஜ் கூறுகையில்,
வரும் ஜனவரி மாதம் முதல் வெங்காய வரத்து அதிக அளவில் இருக்கும். அப்போதுதான் விலை குறைய வாய்ப்பு உள்ளது. அதுவரை இதே நிலைதான் நீடிக்கும். பற்றாக்குறை காரணமாக தான் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. குளிர்சாதன கன்டெய்னர்களில் அடைத்துக் கொண்டு வந்ததால் வெங்காயத்தின் நிறம் மாறி உள்ளது. மற்றபடி அதன் ருசியும், தன்மையும் மாறவில்லை. அதனால் பொதுமக்கள் அச்சமின்றி இதை வாங்கி பயன்படுத்தலாம் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.