ETV Bharat / state

திருச்சியில் இலவச தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி

ஏழை மாணவர்களுக்கான இலவச செல்போன், லேப்டாப் பழுது நீக்கும் தொழில் திறன் பயிற்சி திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது.

பயிற்சி தொடக்கம்
author img

By

Published : May 7, 2019, 8:23 PM IST

ஏழை மாணவர்களுக்கான இலவச செல்போன், லேப்டாப் பழுது நீக்கும் தொழில் திறன் பயிற்சி திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மேலசிந்தாமணி பகுதியில் லெனோவா நிறுவன சமூக பணி நிர்வாகி தீபான் மித்ரா, மனிதவள மேம்பாட்டு பங்குதாரர் பிரஜக்தா குல்கர்னி, தொழில் பிரிவு தலைவர் அமித் ஆகியோர் இணைந்து நடத்தும் இலவச தொழில் திறன் பயிற்சியை இன்று தொடங்கி வைத்தனர்.

ஏழை மாணவர்களுக்கான இந்த இலவச பயிற்சியில் 18 வயது முதல் 30 வயது வரையிலான பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்று மாதம் கொண்ட இந்த பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்பட்டு லெனோவா, மோட்டரோலா உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில் :

மும்பையைச் சேர்ந்த எஜூபிரிட்ஜ் நிறுவனம் இந்த பயிற்சியை அளிக்கிறது. இந்த பயிற்சியானது தினமும் 4 மணி நேரம் என மூன்று மாத காலம் அளிக்கப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு சுமார் 7,000 பேருக்கு லேப்டாப், செல்போன் பழுது நீக்குதல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது மேலும் இவர்களுக்கு வேலை வாய்ப்பு, தொழில் தொடங்கவும் உதவிகள் செய்யப்படும்.

இதுபோன்ற பயிற்சியானது இந்தியாவில் புவனேஸ்வர், எர்ணாகுளம், ஜோத்பூர், மைசூர், டெல்லி, சண்டிகர் ஆகிய நகரங்களில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. தற்போது முதல் முறையாக தமிழகத்தில் திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க இலவசமான பயிற்சியாகும் ஏழை மாணவர்கள் இதில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

Intro:திருச்சியில் ஏழைகளுக்கு இலவச தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

Body:திருச்சி:
திருச்சியில் ஏழை மாணவர்களுக்கு செல்போன், லேப்டாப் பழுது நீக்கும் தொழில் திறன் பயிற்சி இலவசமாக அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் 18 வயது முதல் 30 வயது வரையிலான பத்தாம் வகுப்பு முதல் படித்தவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மூன்று மாதங்கள் கொண்ட இந்த பயிற்சியின் முடிவில் சான்றிதழ் அளிக்கப்பட்டு லெனோவா, மோட்டரோலா உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
இது போன்ற பயிற்சி இந்தியாவில் ஏழு இடங்களில் மட்டுமே அளிக்கப்படுகிறது. தற்போது தமிழகத்தில் முதலாவதாக திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள இந்த பயிற்சி மையத்தில் லெனோவா நிறுவன சமூக பணி நிர்வாகி தீபான் மித்ரா, மனிதவள மேம்பாட்டு பங்குதாரர் பிரஜக்தா குல்கர்னி, தொழில் பிரிவு தலைவர் அமித் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தினமும் 4 மணி நேரம் என இரண்டு பிரிவுகளுக்கு மூன்று மாத கால பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோல் வருடத்திற்கு மூன்று முதல் நான்கு பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த வகையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சுமார் 7,000 பேருக்கு லேப்டாப், செல்போன் பழுது நீக்குதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் இவர்களுக்கு வேலை வாய்ப்பு, தொழில் தொடங்கவும் உதவிகள் செய்யப்படும். மும்பையைச் சேர்ந்த எஜூபிரிட்ஜ் நிறுவனம் இந்த பயிற்சியை அளிக்கிறது. இது முழுக்க முழுக்க இலவசமான பயிற்சியாகும். ஏழை மாணவர்கள் இதில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்தியாவில் இந்த திட்டம் புவனேஸ்வர், எர்ணாகுளம், ஜோத்பூர், மைசூர், டெல்லி, சண்டிகர் ஆகிய நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முதலாக திருச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Conclusion:அடுத்த மூன்றாண்டுகளுக்கு சுமார் 7,000 பேருக்கு இந்த பயிற்சியை இலவசமாக அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.